வைரலாக்கும் ரம்யா பாண்டியன் இன் போட்டோஷூட் தயாரிப்பு வீடியோ!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2020, 04:32 PM IST
    1. 2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர்.
    2. ஜோக்கர், டம்மி டப்பாசு, ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார்.
    3. பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
வைரலாக்கும் ரம்யா பாண்டியன் இன் போட்டோஷூட் தயாரிப்பு வீடியோ! title=

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை ரம்யா பாண்டியன். 

2015-ஆம் ஆண்டு டம்மி டப்பாசு திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன் (Ramya Pandian). இவர் குறும்படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமானவர். இவர் ஜோக்கர், டம்மி டப்பாசு, ஆன் தேவதை திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர்.

ALSO READ | பிக் பாஸ் 4 இல் இந்த வாரம் நாமினேட் ஆன 4 போட்டியாளர்கள் இவர்களே!

 2019 ஆம் ஆண்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "குக்கு வித் கோமாளி" என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இவர் அந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். மேலும் நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாருவில் நடுவராக இருந்தார்.

இவருடைய வரவிருக்கும் திரைப்படங்களில் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் தயாரித்த ஒரு படத்திலும், சி. வி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் தயாரித்த திரைபடம் ஆகியவை அடங்கும். சமீபத்தில் இவர் பிக் பாஸ் (Bigg Boss Tamil நான்காவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவரது போட்டோஷூட்டின் போது எடுக்கபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களுடைய 'பிக் பாஸ் 4' தருணங்களைப் போலவே, அவரது ரசிகர்களின் இராணுவ பட்டாளம் இந்த வீடியோ கிளிப்பைக் கொண்டாடுகிறது.

 

 

ALSO READ | பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளர் இவர்தான்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News