மல்யுத்த களத்தில் நடனமாடச் சென்ற நடிகை ராக்கி சாவந்தை வீராங்கனை ஒருவர் தூக்கி வீசியதால் எலும்பு முறிவு ஏற்ப்படுள்ளது...
சண்டிகரில் உள்ள தவ் தேவிலால் விளையாட்டு மைதானத்தில் நடந்த மல்யுத்த போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்ற பிரபல ஹிந்தி நடிகை ராக்கி சாவந்த், நடனம் ஆடி முடிந்ததும் பார்வையாளர்களுக்கான இடத்தில் அமர்ந்திருந்திருந்தார்.
அப்போது மல்யுத்த வீராங்கனை ரோபெல் என்பவர் மற்றொரு வீராங்கனையை தோற்கடித்துவிட்டு பார்வையாளர்களை பார்த்து தன்னுடன் மோத யாரெனும் உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினார். இந்த சவாலை தான் ஏற்பதாக தெரிவித்த ராக்கி சாவந்த், வாயை வைத்துகொண்டு சுமா இல்லாமல் தன்னுடன் நடனமாட தயாரா என்று மறுசவால் விடுத்துள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்ட அந்த மல்யுத்த வீராங்கனையிடம் நடிகை ராக்கி சாவந்த் மோதியுள்ளனர். அப்போது, மல்யுத்த வீராங்கனை நடிகை ராக்கி சாவந் ஒரே நொடியில் தலைகீழாக தூக்கி தரையில் மடார் என எறிந்தார். இதில் நடிகை ராக்கிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை உடனே மீட்டு ஸிராக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதை தடுக்கா வந்த பெண் காலவல் அதிகாரியையும் அந்த மல்யுத்த வீராங்கனை தாக்கியுள்ளார். இந்த வீடியோவை நடிகை ராக்கி சாவந்த் தனது இன்ஸ்க்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவளைதலத்தில் வைரலாக பரவிவருகிறது.