எலியிடம் பல்பு வாங்கிய பூனை, ஓட ஓட துரத்திய எலி: வைரல் வீடியோ

Cat Mouse Fight Video:இப்படி ஒரு எலி பூனை சண்டையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. இதில் நடக்கும் விஷயம் கண்டிப்பாக உங்களை வியக்க வைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 6, 2023, 03:23 PM IST
  • சமீபத்தில் ஒரு எலி - பூனை சண்டை வீடியோ பகிரப்பட்டுள்ளது.
  • இதை பார்த்தால் நமக்கு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனின் நினைவு வரும்.
  • ஆனால், இது சற்று வித்தியாசமான வீடியோவாக உள்ளது.
எலியிடம் பல்பு வாங்கிய பூனை, ஓட ஓட துரத்திய எலி: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: எலிகளும் பூனைகளும் பரம எதிரிகள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எலிகளைத் தேடி அவற்றை பிடிக்க பூனைகள் எப்போதும் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருப்பது உண்டு. பூனைகளை கண்டால் எலிகள் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்துவிடும். பெரும்பாலான சமயங்களில் பூனைகளிடம் எலிகள் மாட்டிக்கொள்ளும் என்றாலும், சில சமயங்களில் இதற்கு நேர் மாறாக நடப்பதும் உண்டு.

பூனை மற்றும் எலியின் சண்டையை காட்டும் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. எலி பூனை சண்டையை மிக வேடிக்கையாக காட்டும் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனை பிடிக்காதவர்களும் யாரும் இருக்க மாட்டார்கள். இணையத்தில் பல நிஜ டாம்களையும் ஜெர்ரிகளையும் நாம் காண்கிறோம். 

சமீபத்திலும் அப்படி ஒரு எலி - பூனை சண்டை வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தாலும் நமக்கு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனின் நினைவு வரும். ஆனால், இது சற்று வித்தியாசமான வீடியோவாக உள்ளது. இதை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. மேலும் ஒரு முக்கியமான வாழ்க்கை தத்துவத்தையும் நாம் இதிலிருந்து கற்றுக்கொள்கிறோம். 

பொந்திலிருந்து வெளிவந்த எலி

ஒரு குளிர் பிரதேசத்தில் எலி ஒன்று இரை தேடி தன் பொந்திலிருந்து வெளியே வருவதை வீடியோவில் முதலில் காண்கிறோம். அப்போது ஒரு பூனை அதைத் தாக்க முயற்சிக்கிறது. பூனை தன் பின்னால் ஓடி வருவதை புரிந்துகொண்ட எலி வேகமாக ஓடுகிறது. ஆனால் அது பயந்தது போல் தெரியவில்லை. 

மேலும் படிக்க | மேடைக்கு வந்த நண்பன் செய்த செயல்: சைலண்டான மணமகன், ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

எலி கொடுத்த பதிலடி

எலி வேகமாக ஓட, பூனையும் அதன் பின்னால் ஓடுகிறது. ஒரு கட்டத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த எலி திரும்பி பூனையின் மீது பாயத் தொடங்குகிறது. இதை சற்றும் எதிர்பாராத பூனை ஓடத் தொடங்குகிறது. இப்போது எலி அதன் பின்னால் ஓடுகிறது. இது பார்ப்பதற்கு மிக வேடிக்கையாக உள்ளது.

நம்மை ஒரு நபரோ, அல்லது பிரச்சனையோ தொந்தரவு செய்தால், அதை பார்த்து அஞ்சி ஓடுவதற்கு பதிலாக, தைரியமாக திரும்பி எதிர்கொண்டால், அவை நம்மைக் கண்டு அஞ்சி ஓடும் என்ற பாடத்தை இந்த வீடியோ நமக்கு புகட்டுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது ட்விட்டரில் @TheFigen_ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் தலைப்பில், ‘2023 டாம் அண்ட் ஜெர்ரி...  பாத்திரங்கள் மாறிவிட்டன!' என எழுதப்பட்டுள்ளது. 

வீடியோவை 6 லட்சம் பேர் பார்த்துள்ளனர்

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த செய்தியை எழுதும் வரை 6 லட்சத்திற்கும் அதிகமான முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் அனைவரையும் சிரிக்க வைக்கும் இந்த வீடியோ பல கோடி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதற்கு அவர்கள் பல்வேறு கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | இந்த பாடு படுத்திறீங்களே! டேய் நான் பாம்புடா? கொஞ்சமாவது மதிங்க! கெஞ்சல் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News