பக்காவா பாத்திரம் தேய்க்கும் குரங்கு: பாத்தா பாத்துகுட்டே இருப்பீங்க.. வேற லெவல் வைரல் வீடியோ

Funny Monkey Video: என்ன இது? இப்படி கூட நடக்குமா? என நம்மை ஆச்சரியப்பட வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 15, 2023, 01:02 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் _arun___520 என்ற கணக்கில் பகிரப்ப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியுஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
பக்காவா பாத்திரம் தேய்க்கும் குரங்கு: பாத்தா பாத்துகுட்டே இருப்பீங்க.. வேற லெவல் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

இணையத்தில் சிங்கம், புலி, குரங்கு, பாம்பு, நாய், பூனை ஆகிய மிருகங்களுக்கு அதிக மவுசு இருந்தாலும், குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே சொல்லலாம். குரங்குகளின் குறும்பு வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு மிக கியூட்டாக இருந்து, இணையவாசிகளின் உள்ளங்களை கொள்ளைகொள்கின்றன. குறிப்பாக மிக வித்தியாசமான, விசித்திரமான பல குரங்கு வீடியோக்களை நாம் இணையத்தில் தினமும் காண்கிறோம். தற்போதும் அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

குரங்குகள் மனிதர்களை தொந்தரவு செய்வதையும், அவர்களது பொருட்களை பிடுங்கி அவர்களை படுத்தியெடுப்பதையும், பல வித லூட்டிகளை செய்வதையும் நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். ஆனால், இது மட்டுமல்லாமல் நம்பவே முடியாத வகையில் குரங்குகள் செய்யும் சில செய்கைகளின் வீடியோக்களும் இணையத்தில் பகிரப்படுகின்றன. இவற்றை பார்த்தால் நமக்கு ஆச்சரியமே மேலோங்கும். அப்படி ஒரு வீடியோ இப்போதும் வைரல் ஆகி வருகின்றது.

பாத்திரம் தேய்க்கும் குரங்கு

இந்த வீடியோவில், குரங்கு ஒருவரது வீட்டில் பாத்திரங்களை கழுவுவதைக் காண முடிகின்றது. மனிதர்களை போலவே குரங்கு மிக பொறுமையாக, நேர்த்தியாக பாத்திரத்தை அழுத்தி அழுத்தி தேய்ப்பது ஆச்சரியம் அளிக்கின்றது. பாத்திரம் தேய்க்கும்போது அந்த குரங்கு அங்கும் இங்கும் பார்க்கிறது. அப்போது ஒருவர் வந்து இன்னும் சில பாத்திரங்களை சுத்தம் செய்ய வைத்து விட்டுப் போவது தெரிகிறது. இதை பார்த்த பின்னரும் அந்த குரங்கு கோவப்படாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

மேலும் படிக்க | “என்னது மியாவ் மியாவ்-ஆ?” பூனை போல கத்தும் சிறுத்தை..! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..!

அந்த குரங்கை நிஜமாகவே சிலர் தங்கள் வீட்டில் பாத்திரம் கழுவ பயன்படுத்துகிறார்களா அல்லது வீடியோ எடுப்பதற்காக அப்படி செய்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அந்த குரங்கை பார்த்தால் பாத்திரம் தேய்ப்பதில் அதிக அனுபவம் உள்ளது போல தோன்றுகிறது. எனினும், மனிதர்களை பார்த்தும் குரங்கு இதை கற்றுக்கொண்டிருக்கலாம். 

அசத்தலாக பாத்திரம் தேய்க்கும் குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் _arun___520 என்ற கணக்கில் பகிரப்ப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியுஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். சில பாயனர்கள் குரங்கை வியந்து பாராட்டினாலும், பலர் விலங்குகளை இப்படி வேலை வாங்கும் மனிதர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வாயில்லா ஜீவன்களை இப்படி மனித குலம் பாடாய் படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது என பயனர்கள் காட்டமாக கூறி வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | மெட்ரோவில் ஒலித்த ‘தையா தையா’... ஷாருக்கான் போல் ஆடி இணையத்தை கலக்கிய நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News