கண்ணாடியில் தன்னை பார்த்து கன்பியூஸ் ஆன குரங்கு: குலுங்கி குலுங்கி சிரிப்பீங்க, வைரல் வீடியோ

Funny Monkey Video:இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் சிரிப்பை அடக்க முடியாது. உங்கள் சிரிப்புக்கு நாங்கள் கேரண்டி!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 27, 2023, 04:27 PM IST
  • இந்த வீடியோவில், குரங்கு ஒன்று தன்னைத்தானே கண்ணாடியில் பார்ப்பதை காண முடிகின்றது.
  • கண்ணாடியில் தன்னை பார்த்த குரங்கு அதிர்ச்சியுடன் எழுந்து நிற்கிறது.
  • கண்ணாடிக்கு அந்த பக்கம் வேறு ஒரு குரங்கு இருப்பதாக நினைத்துக்கொள்கிறது.
கண்ணாடியில் தன்னை பார்த்து கன்பியூஸ் ஆன குரங்கு: குலுங்கி குலுங்கி சிரிப்பீங்க, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 

பாம்பு, யானை, குரங்கு, நாய், பூனை ஆகிய விலங்குகளுக்கு இணையவாசிகளிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. இவை செய்யும் குறும்புகளை நெட்டிசன்ஸ் விரும்பி பார்க்கிறார்கள். அதுவும் குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். 

சமூக ஊடகங்களில் தினம் தினம் குரங்குகளின் சேட்டை வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை பார்க்க மிக கியூட்டாகவும், சிரிக்க வைக்கும் வகையிலும் உள்ளன. இந்த குரங்குகள் செய்யும் கோமாளித்தனத்தை பார்த்தால், கண்டிப்பாக நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது.

மேலும் படிக்க | Viral Video: காதலியை கவர போட்டியிடும் ஆண் பறவைகள்... மசியாத பெண் பறவை!

தற்போது ஒரு மிக வித்தியாசமான வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது குரங்குகளின் சுட்டித்தனத்துக்கும், குறும்புத்தனத்துக்கும் ஒரு உதாரணமாக உள்ளது. 

கண்ணாடியில் தன்னை பார்த்த குரங்கு

இந்த வீடியோவில்,, குரங்கு ஒன்று தன்னைத்தானே கண்ணாடியில் பார்ப்பதை காண முடிகின்றது. கண்ணாடியில் தன்னை பார்த்த குரங்கு அதிர்ச்சியுடன் எழுந்து நிற்கிறது. முதலில் குரங்கு கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும் ஒரு இடத்திற்கு வருகிறது. அங்கு கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து கண்ணாடிக்கு அந்த பக்கம் வேறு ஒரு குரங்கு இருப்பதாக நினைத்துக்கொள்கிறது. குரங்கு எழுந்து நிற்கிறது, முன்னும் பின்னுமாக நடக்கிறது, பக்க வாட்டில் நகர்கிறது, மீண்டும் எழுந்து நிற்கிறது. இது அனைத்தையும் கண்ணாடியில் இருக்கும் குரங்கும் அப்படியே செய்யவே, குரங்குக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அது அதிர்ச்சியில் எழுந்து நிற்கிறது, வாயில் கையை வைத்து ஆச்சரியப்படுகின்றது.

மேலும் படிக்க | ஏய்.. நான் பார்க்கதான் பசு, கோவம் வந்தா பிசாசு: சீண்டிய நபரை சின்னாபின்னமாக்கிய பசு, வைரல் வீடியோ

தான் செய்வதையெல்லாம் செய்து, கண்ணாடிக்கு பின்னால் இருக்கும் குரங்கு தன்னை நக்கல் செய்வதாக இந்த குரங்கு நினைத்துக்கொள்கிறது. அது பலமுறை கண்ணாடியில் தெரியும் குரங்கின் மீது பாய்கிறது. ஆனால் அங்கு குரங்கு இல்லாமல் ஏமாற்றம் அடைகிறது. இடையிடையே அங்கு மற்றொரு குரங்கும் வருகிறது. அதற்கு தன் உருவம் தெரியவே அதற்கும் அதே குழப்பம் ஏற்படுகின்றது. 

இந்த முழு வீடியோவில் கண்ணாடிக்கும் முன்னால் தன் உருவத்தை வேறு ஒரு குரங்கு என எண்ணிய குரங்கின் பல்வேறு சேட்டைகளை காண முடிகின்றது. மிகவும் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், முழு வீடியோவில் கண்ணாடி முன் இருந்தும், குரங்குக்கு இது எப்படி நடக்கிறது என்று புரியவில்லை? 

கன்பியூஸ் ஆன குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்: 

வீடியோ வைரல் ஆனது

குரங்கின் இந்த வேடிக்கையான வீடியோ யூடியூப்பில் Mirror Vs Monkeys என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இனையவாசிகள் இதற்கு பல வித சுவாரசியமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ரயில் வரும்போது திடீரென தண்டவாளத்தின் குறுக்கே வந்து நின்ற யானையின் திக் திக் நிமிட வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News