வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. இதில் பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம். சில சமயங்களில் திருமண மேடையிலேயே மணமகனும், மணமகளும் செய்யும் சில வேலைகளால் சிரிப்பை அடக்க கூட முடியாமல் போகிறது. எனினும், ஒரு மணமகன் தனது சொந்த திருமணத்தில் ஏகப்பட்ட பந்தா காட்டுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? சரியாக திருமணத்திற்கு முன்பு மணமகன் பந்தா காட்டத் துவங்கும் ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அவர் தரையில் கால்களை வைக்கக்கூட தயாராக இல்லை. ஆனால், இதற்குப் பிறகு வீடியோவில் நடக்கும் விஷயம் மிகவும் வேடிக்கையானது.
பிகு செய்த மணமகன்
சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில் விருந்தினர்கள் உணவு உண்ண அமைர்ந்திருப்பது தெரிகிறது. அனைவரும் சுமையான உணவை ருசித்து வருகிறார்கள். அனைவரும் மாப்பிள்ளையின் எண்ட்ரிக்காக காத்திருப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. ஆனால். மணமகனோ தனது திருமணத்திலேயே எக்கச்சக்கமாக பிகு காட்டுகிறார். அவர் மணமேடைக்கு வரவே தயாராக இல்லை.
மேலும் படிக்க | ஓடிய மாப்பிள்ளை, துரத்திய மணப்பெண்: காரணம் என்ன? வைரல் வீடியோ
மாப்பிள்ளையை இடுப்பில் தூக்கிய மாமனார்
சமூக ஊடகங்களில் வைரல் ஆகும் இந்த வீடியோவில் மாப்பிள்ளை பல விதங்களில் பந்தா காட்டுகிறார். அங்கு துர்நாற்றம் வீசுவது போல, கைக்குட்டை ஒன்றையும் மூக்கின் மீது வைத்துக்கொள்கிறார். அப்போது மணமகளின் தந்தை அங்கே வருகிறார். மாப்பிள்ளை காட்டிய பந்தாவை சரி செய்ய அவர் செய்த வேலையை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மணமகளின் தந்தை உள்ளே வந்தவுடன் மணமகனை அப்படியே தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்வதை வீடியோவில் காண முடிகின்றது. இந்தக் காட்சி வீடியோவில் மிகவும் வேடிக்கையாகத் தெரிகிறது.
குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ghantaa என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் ரியாக்ட் செய்துள்ளனர்.
இதற்கு பல வித வேடிக்கையான கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. நெட்டிசன்களால் இந்த வீடியோவை பார்த்து செரிக்காமல் இருக்க முடியவில்லை. பல வித எமோஜிகளை பயனர்கள் கமெண்ட் பாக்சில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | திருமணத்தில் விருந்தினர்கள் செய்த கலவர காரியம்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ