மணமேடையில் திருமண ஜோடி செய்த காரியம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மேற்கு பகுதியை சேர்ந்த மணமக்கள் திருமண கோலத்தில் மணமேடையில்  'தும்சா கோய் பியாரா' என்ற பாடலுக்கு நடனமாடியது அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.  

Written by - RK Spark | Last Updated : Aug 17, 2022, 12:06 PM IST
  • மேடையில் குத்தாட்டம் போட்ட ஜோடிகள்.
  • பிரபலமான பாட்டுக்கு நடனமாடி அசத்தல்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
மணமேடையில் திருமண ஜோடி செய்த காரியம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ! title=

திருமண நிகழ்வுகளில் அவரவர்களின் மரபுக்கேற்ப சடங்கு சம்பிரதாயங்கள் எப்படி ஒரு அங்கமாக இருக்கிறதோ அதேபோன்று தற்போது நடக்கும் திருமணங்களில் நடனமாடுவது முக்கியமான ஒரு அங்கமாக மாறிவிட்டது.  மணமகன் அல்லது மணமகளின் நண்பர்களோ அல்லது உற்வினர்களோ மேடையில் ஆடுவது, அவர்களுடன் சேர்ந்து மணமக்களும் ஆடுவது என்று இப்போது நடக்கும் திருமணங்கள் களைகட்ட தொடங்கிவிட்டன.  திருமணத்திற்கு தயாராகுவதை விட திருமண நிகழ்வுகளில்  நடனமாட தயாராகுவது தான் தற்போது பரவலாக நடந்து வருகிறது.  ஒவ்வொருவரது வாழ்விலும் திருமணம் என்பது மறக்கமுடியாத முக்கியமான ஒரு நிகழ்வாகும், அப்படிப்பட்ட அந்த திருமணத்தில் நடக்கும் ஒவ்வொன்றையும் அழகான நியாபங்களாக  மாற்றுவதில் தற்போதைய தலைமுறையினர் மெனெக்கெட்டு வருகின்றனர்.  

இப்போதெல்லாம் திருமணத்தில் புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞர்களும் கூட சில நடன அசைவுகளை சொல்லிக்கொடுத்து பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.  திருமண நிகழ்வில் மணமக்கள் மேடையில் நடமாடவில்லை என்றால் அந்த திருமணமே முழுமைபெறவில்லை என்று சிலர் கருதும் அளவிற்கு இந்த நாகரீகம் பரவிவிட்டது.  தற்போது மேற்கு நாட்டை சேர்ந்த ஒரு திருமண ஜோடி மேடையில் குமார் சானு மற்றும் அல்கா யாக்னிக் பாடிய 'தும்சா கோய் பியாரா' என்ற பாடலுக்கு அழகாக நடமாடியுள்ளனர்.  இந்த பாடல் குதார் படத்தில் இடம்பெற்றது, அதில் கோவிந்தா மற்றும் கரிஷ்மா கபூர் இந்த பாடலுக்கு நடமாடினார்கள்.  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்ற இந்த திருமண விழாவில் திருமண ஜோடி அழகான உடைகளை அணிந்துகொண்டு பாடலுக்கு சிறப்பான நடன அசைவுகளை வெளிப்படுத்தினர்.  

 

மேலும் படிக்க | கார்ட்டூனை பார்த்து விளையாடும் பூனைக்குட்டி! இணையத்தை கலக்கும் வீடியோ!

ஹெவி ஸ்டெப்பும் இல்லாமல், ஸ்லோவாகவும் இல்லாமல் இவர்களது நடனம் நேர்த்தியாக இருந்தது, இவர்களது கெமிஸ்ட்ரியும் பலருக்கும் பிடித்திருந்தது.  மணமேடையில் திடீரென்று இவர்கள் நடனமாடியதும் அங்கு சூழ்ந்திருந்த அனைவரும் சத்தம் போட்டு புதுமண தம்பதியரை உற்சாகப்படுத்தினர்.  ஏற்கனவே விழாக்கோலம் பூண்டிருந்த இந்த திருமண நிகழ்ச்சி இவர்களின் நடந்தால் மென்மேலும் சிறப்பாக அமைந்து அந்த இடைத்தையே உற்சாகப்படுத்தியது.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ரசிக்க செய்துள்ளது.

மேலும் படிக்க | டேய் நீ போடா..! நாடோடிகள் பட பாணியில் எட்டி பார்க்கும் பூனைக்குட்டிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News