மணமகளின் வேற லெவல் குத்தாட்டம்: வாயடைத்து போன மணமகன், வைரலான வீடியோ

Viral Video: தன்னை மறந்து மணமகள் ஆடும் நடனத்தைப் பார்த்து மணமகனும் வாயடைத்து நிற்கிறார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 7, 2022, 08:08 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
மணமகளின் வேற லெவல் குத்தாட்டம்: வாயடைத்து போன மணமகன், வைரலான வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. பொதுவாக தன்னுடைய திருமணத்தில் தான் மகிழ்ச்சியாக இருக்க வெண்டும் என மணமகள் நினைப்பது வழக்கம். வெட்கப்பட்டு, குனிந்த தலையுடன் தான் மணமகள் இருக்க வேண்டும் என்ற சிந்தனை பழங்கால சிந்தனையாகி விட்டது.

தற்போது மணம் புரியும் பெண்கள், வழக்கமான பாணியை புறக்கணித்து புதுப்புது விதங்களில் திருமண நாளை அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். இப்போதும் அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. 

திருமணங்களின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பதிவேற்றப்படுகின்றன. இவற்றில் சில மிகவும் வைரல் ஆகி விடுகின்றன. தற்போது வைரல் ஆகும் வீடியோவில், திருமண நாளன்று திடீரென நடனமாட ஆசைப்பட்ட மணப்பெண்ணின் நடனத்தை காண முடிகின்றது. தன்னை மறந்து அவர் ஆடும் நடனத்தைப் பார்த்து மணமகனும் வாயடைத்து நிற்கிறார். இந்த அட்டகாசமான வீடியோவை நெட்டிசன்களும் மிகவும் ரசித்து வருகின்றனர்.

சில நொடிகளே கொண்ட இந்த வைரல் வீடியோ இதுவரை பல ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், திருமணத்தின் சடங்குகள் அனைத்தும் முடிந்துவிட்டது தெரிகிறது. பின்னணியில் பாடல் ஒலிக்க, தன்னை கட்டுப்படுத்த முடியாத மணமகள் டிஜே-ஐ அடைந்து நடனமாடத் தொடங்குகிறார். 

மேலும் படிக்க | Funny Video: ‘என் கிட்டே ஒரு நாள் சிக்காமயா போயிடுவ’; கடுப்பில் செம்மறி ஆடு!

துவக்கத்தில் அவரது நடனம் சற்று சாதாரணமாகத் தெரிந்தாலும், சில நொடிகளுக்குப் பிறகு, அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து மணமகனும் ஒரு கணம் ஆச்சரியப்பட்டார். இதற்கிடையில் மணமகனும் தனது மனைவியுடன் சிறிது நடனமாடுவதை வீடியோவில் காண முடிகிறது. 

குத்தாட்டம் போட்ட மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்: 

மணமகனும், மணமகளும் நடனமாடும் இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் photoshoot_wedding என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் படிக்க | சின்னபுள்ளதனமால்ல இருக்கு!! மணமேடையில் மணமகன் மணமகள் செய்த காரியம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News