மணமகனை பளார் என அடித்த மணமகள்: ஷாக் ஆன நெட்டிசன்கள், வைரல் வீடியோ

Funny Wedding Video: மணமேடையிலேயே ரணகளம் செய்த மணமகள். மணமகனை பளார் என அடித்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 16, 2022, 02:07 PM IST
  • இனிப்பை ஊட்டிய மணமகள்.
  • சாப்பிட மறுத்த மணமகன்.
  • மேடையிலேயே அடி, உதை, சண்டை
மணமகனை பளார் என அடித்த மணமகள்: ஷாக் ஆன நெட்டிசன்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன.

திருமண சடங்குகளில் முக்கியமான ஒன்று மாலை மாற்றும் சடங்காகும். இதில் மணமகளும் மணமகனும் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக்கொள்கின்றனர். அதன் பின்னர் சில இடங்களில் இனிப்புகளை பரிமாற்றிக்கொள்ளும் சடங்கும் உள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. சமீபத்தில் வெளியான இந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் லட்டு ஊட்டிக்கொள்ளும்படி அங்கு உள்ள உறவினர்கள் கூறுகிறார்கள். அப்போதுதான் பிரச்சனை தொடங்குகிறது. 

மேலும் படிக்க | ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ

தம்பதிகள் இனிப்புகளை ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ள தயாராகிறார்கள். முதலில் மணமகள் மணமகனுக்கு இனிப்பை ஊட்டுகிறார். ஆனால், மாப்பிள்ளைக்கு இனிப்பு சாப்பிடும் எண்ணமே இருப்பது போல தோன்றவில்லை. இனிப்பை சாப்பிடும்படி மணமகனை வலியுறுத்தும் மணமகள் பின்னர் அதை அவருக்கு வலுக்கட்டாயமாக ஊட்டுகிறார். இதனால் கோபமடைந்த மணமகன் மணமகளின் கையை தள்ளி விடுகிறார்.

பின்னர், மணமகன் மணமகளுக்கு இனிப்பை அளிக்க முற்படுகிறார். அப்போது மணமகளும் அதை சாப்பிடாமல் அடம் பிடிக்க, மணமகன் அவர் வாயில் இனிப்பை திணிக்கிறார். இதனால், கோபமடைந்த மணமகள் மேடையில், அனைவருக்கும் முன்னால் மணமகனை அறைந்து விடுகிறார். வைரலான இந்த வீடியோவை நிரஞ்சன் மஹாபத்ரா என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் போஸ்டில் இதற்கான தலைப்பில், ‘இந்த காலத்தில் மேடையில் அடிப்பது ஃபாஷனாகி உள்ளது’ என்று எழுதியுள்ளார். 

வேற லெவலில் சண்டையிட்ட மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோ ஆன்லைனில் வெளிவந்த உடனேயே, சிறிது நேரத்திற்கெல்லாம் நூற்றுக்கணக்கான லைக்குகளைப் பெற்றது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர். எனினும், சிலர் இந்த ஜோடி மேடையிலேயே இப்படி சண்டை இடுவதை வன்மையாக விமர்சித்தும் வருகின்றனர். இதற்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | மணமகளை பார்த்து மயங்கிய மணமகன் மேடையில் செய்த வேலை: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News