வைரல் வீடியோ: வயது என்பது ஒரு எண்தான். மனதில் உறுதி வந்துவிட்டால், வயது என்னும் வேலி விலகிவிடும். இதை நிரூபிக்கும் பல வீடியோக்களை நாம் தினமும் இணையத்தில் காண்கிறோம்.
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
இந்த வீடியோவில் காணப்படும் பெண்ணுக்கு வயது சுமார் 70 இருக்கும் என்று கூறப்படுகிறது. இளவயதினரே வெளியே செல்வதற்கும், இங்கும் அங்கும் சுற்றுவதற்கும் சோம்பல் கொள்ளும் இந்த காலத்தில், எதைப் பற்றியும் கவலைப்படாமல், இந்த 70 வயது பாட்டி மாஸாக ஆற்றில் குதிக்கிறார்.
மேலும் படிக்க | போதையில் மாலையை மாற்றிப்போட்ட மணமகனுக்கு கிடைத்த அடி, உதை: வைரல் வீடியோ
கிளாஸா நீச்சல் போட்ட பாட்டி
ஹர்கி பைடி பாலத்தில் இருந்து ஒரு வயதான பெண்மணி கங்கை நதியில் குதிப்பதை வீடியோ-வில் காண முடிகிறது. இதற்குப் பிறகு, அவர் கரை வரை சூப்பராக நீந்திச்செல்வதையும் காண்கிறோம். அந்தப் பெண்ணின் தைரியம் உண்மையில் பாராட்டுக்குரியது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த காணொளியை பார்த்தால், பார்ப்பவர்களையும் உற்சாகம் பற்றிக்கொள்ளும்.
மாஸ் பாட்டியின் கிளாஸ் வீடியோவை இங்கே காணலாம்:
பாட்டியின் ரசிகர்களான இணையவாசிகள்
இந்த வீடியோவை பார்த்து அனைவரும் இந்த பாட்டியின் ரசிகர்களாக மாறி வருகின்றனர். தங்கள் கனவுகளை நனவாக்குவதில் சோம்பேறித்தனம் காட்டுபவர்களுக்கு வயதான இந்த பெண்மணி பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளார். இந்த வீடியோ மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்படி ஒரு மூதாட்டி சாகசம் செய்வதைப் பார்த்த மக்களால் தங்கள் கண்களை நம்ப முடியவில்லை.
பாட்டியின் வீடியோ வைரலானது
இந்த வீடியோ சமூக வலைதளமான ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. சில மணி நேரங்களிலேயே ஒன்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். வெறும் 24 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ பாட்டிக்கு பெரும் புகழைக் தேடிக் கொடுத்துள்ளது. இதுமட்டுமின்றி, இந்த வீடியோவை மக்கள் பெரிதும் விரும்பி வருகின்றனர்.
பாட்டியின் துடிதுடிப்பும், சுறுசுறுப்பும், உற்சாகமும் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இணையவாசிகள் பாட்டியின் இந்த துணிச்சலையும், குழந்தைத்தனத்தையும் பாராட்டி பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
மேலும் படிக்க | சாலை உலா செல்லும் வாத்துக் குடும்பம்: போக்குவரத்து காவலரின் மனிதாபிமான உதவி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR