GV நடிப்பில் 100% காதல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

GV பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

Last Updated : Sep 14, 2019, 02:43 PM IST
GV நடிப்பில் 100% காதல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது! title=

GV பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது!

இயக்குநர் சந்திரமௌளி இயக்கத்தில் நடிகர், இசையமைப்பாளர் GV பிரகாஷ் குமார், ஷானிலி பாண்டே, நாசர், தம்பி ராமையா என பலர் நடித்துள்ள திரைப்படம் 100% காதல். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

அர்ஜூன் ரெட்டி திரைப்படத்திற்கு பின்னர் ஷாலினி பாண்டேவுக்கு கிடைத்த தமிழ் திரைப்படம் 100% காதல். எனினும் படத்தின் உறுவாக்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக படத்தின் வெளியீடு நெடு நாட்களாக தள்ளிச்சென்றது. இந்நிலையில் தற்போது பிரச்சினைகள் ஓரளவிற்கு சரி செய்யப்பட்டு தற்போது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

இத்திரைப்படமானது தெலுங்கில் நாகச்சைத்தன்யா மற்றும் தமன்னா நடிப்பில் உருவான 100% லவ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். தற்போது வெளியாகியுள்ள 100% காதல் திரைப்பட ட்ரைலர், தெலுங்கு பதிப்பின் ப்ரேம்களை அப்படியே தமிழ் மொழிக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிகிறது. எனினும் படத்தின் வெற்றி, தெலுங்கு பதிப்பில் கிடைத்த அளவிற்கு வருமா? என்பது படத்தின் வெளியீட்டிற்கு பின்னரே தெரியும்.

Trending News