தோட்டாக்கல் முழங்க வெளியானது துப்பாக்கி முனை teaser!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள துப்பாக்கி முனை திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

Last Updated : Sep 16, 2018, 07:13 PM IST
தோட்டாக்கல் முழங்க வெளியானது துப்பாக்கி முனை teaser! title=

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள துப்பாக்கி முனை திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

60 வயது மாநிறம் படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் துப்பாக்கி முனை. இத்திரைப்படத்தின் டீஸரினை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இன்று வெளியிட்டுள்ளார்.

'நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல' திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிதக்கும் இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். எல்.வி முத்துகணேஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேல.ராமமூர்த்தி எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இத்திரைப்படம் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸரில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக விக்ரம் பிரபு வலம் வருகிறார்.

Trending News