VideoGame மோகத்தால், மனைவியை தாக்கிய ஆஸி., கணவர் கைது!

ஆன்லைன் வீடியோ கேம் விளையாட்டின் மீது இளைஞர்களின் மோகம் அதிகமாகியுள்ளது, இந்த மோகம் ஆஸித்திரேலியா இளைஞர் ஒருவரை சிறையில் அடைத்துள்ளது...

Last Updated : Dec 12, 2018, 08:00 PM IST
VideoGame மோகத்தால், மனைவியை தாக்கிய ஆஸி., கணவர் கைது! title=

ஆன்லைன் வீடியோ கேம் விளையாட்டின் மீது இளைஞர்களின் மோகம் அதிகமாகியுள்ளது, இந்த மோகம் ஆஸித்திரேலியா இளைஞர் ஒருவரை சிறையில் அடைத்துள்ளது...

ஆஸ்திரேலியாவின் New South Wales பகுதியை சேர்ந்தவர் MrDeadMoth, இவர் Fortnite என்னும் ஆன்-லைன் கேமில் ஆர்வமிக்கவர். தனது விளையாட்டின் போது யார் வந்தாலும் அவர்கள் இவருக்கு இரண்டாம் பட்சம் தான்... அந்தவகையில் கடந்த சனி அன்று இவர் தனது Twitch கணக்கு உதவியுடன் Fortnite ஆன்லைன் கேமினை விளையாடியுள்ளார்.

அப்போது அவரது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். நிகழ்நேரத்தில் மற்ற பயனர்களுடன் விளையாடப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டில், MrDeadMoth தனது 21-வயது மனைவியை தாக்கியது அனைவருக்கும் தெரிந்துள்ளது.

இச்சம்பவத்தினை அடுத்து நேரலையில் இவருடன் விளையாடிய நபர்கள் MrDeadMoth மீது காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சம்பவம் நடந்த 3 மணி நேரத்திற்குள்ளாக MrDeadMoth-னை New South Wales காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வீடியோவில் MrDeadMoth-ன் குழந்தைகள் அலரும் சத்தமும் கேட்கிறது. சம்பவத்தின் போது தன் குழந்தைகள் முன் தன் மனைவியை MrDeadMoth தாக்கியிருப்பது இந்த அலரல் சத்தத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Trending News