Snacks Cup: பெத்தவங்களுக்கு வத்தாச்சு விடிவுகாலம் - நீங்களே பாத்து தெரிஞ்சுக்க வேண்டிய வீடியோ

குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனி போட்டுக்கொடுக்க சூப்பரான கப் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 24, 2022, 03:08 PM IST
Snacks Cup: பெத்தவங்களுக்கு வத்தாச்சு விடிவுகாலம் -  நீங்களே பாத்து தெரிஞ்சுக்க வேண்டிய வீடியோ title=

வீட்டில் ஒரு குழந்தை இருந்தாலே அந்த குடும்பம் கலகலப்பாக இருக்கும். அவர்களின் சேட்டையும் விளையாட்டும் எவ்வளவு பெரிய மனக்கஷ்டத்தில் இருப்பவர்களையும் மகிழ்ச்சிபடுத்திவிடும். அதேநேரத்தில் அவர்களின் சேட்டை பெற்றோருக்கு எப்போதும் மகிழ்ச்சியானதாக இருக்காது. சில விஷயங்கள் கோபத்தைக் கூட வரவழைக்கும். அதாவது, தின்பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை ஒரு கப்பில் போட்டுக், சாப்பிடுமாறு அவர்கள் முன் வைத்தால், அடுத்த நொடியே அதனை கீழே போட்டு கோலம் போட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.அந்த நேரத்தில் தாய் அல்லது அப்பாவுக்கு சகிக்க முடியாத கோபம் வரும். 

மேலும் படிக்க | 'எவ்வளவு நக்கினாலும் சுவையே தெரியலையே’: இதயம் கவர்ந்த நாயின் வைரல் வீடியோ

இருந்தாலும் குழந்தை மீது காட்ட முடியாதே. அதனால் சிரித்துக் கொண்டே மீண்டும் அந்த திண்பண்டத்தை போட்டுக் கொடுப்பார்கள். வளரும் பருவத்தில் நாமும்கூட செய்திருப்போம். குழந்தையாக இருப்பவர்கள் அனைவருமே செய்யக்கூடிய விஷயம் தான் இது. இருந்தாலும், இதற்கு ஒரு என்டு இல்லையா? என்ற குமுறல் எல்லா காலகட்டத்திலும் இருந்து கொண்டு இருக்கிறது. உணவு போட்டுக் கொடுத்தால் கீழே விழவும் கூடாது, அவர்களும் சாப்பிட வேண்டும். 

இதற்கு ஏற்றார்போல் புதியதாக ஒரு கண்டுபிடிப்பு வேண்டும் என்பதை புரிந்து கொண்ட ஒருவர், கோடிக்கணக்கான பெற்றோர்களின் மனக்குமுறலை போக்கும் விதமாக அழகான கப் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த கப்பில் நீங்கள் எந்த நொறுக்குத்தீனி போட்டுக் கொடுதாலும் கீழே கொட்டவே கொட்டாது. அவர்கள் எப்படி அந்தக் கப்பை திருப்பினாலும் அதற்கு ஏற்ப கப்பும் திரும்பிக் கொள்ளும். அதனால் நீங்கள் பயப்படாமல் அந்தக் கப்பை வாங்கி உணவுப் பொருட்களை போட்டுக் கொடுக்கலாம்.  இந்த வீடியோ இணையத்தில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | குடும்பத்துடன் டூர் ட்ரிப்; சூர்யா, ஜோதிகா வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News