MS Dhoni-யின் மறைந்த முன்னாள் காதலியின் போட்டோ வைரல்: அவர் இறந்தது எப்படி?

தோனி தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. புகைப்படத்தில் தோனியுடன் இருக்கும் பெண் அவரது மறைந்த முன்னாள் காதலி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 20, 2021, 09:01 PM IST
  • தோனியின் வாழ்க்கையின் ஒரு சோகமான பகுதி பற்றி பலருக்கு தெரியாது.
  • சாக்ஷியை திருமணம் செய்வதற்கு முன்பு, தோனியின் வாழ்வில் மற்றொரு பெண் இருந்தார்.
  • அவரை தோனி மிகவும் நேசித்தார்.
 MS Dhoni-யின் மறைந்த முன்னாள் காதலியின் போட்டோ வைரல்: அவர் இறந்தது எப்படி? title=

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷி ராவத் மற்றும் மகள் ஜீவாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால் தோனியின் வாழ்க்கையின் சோகமான ஒரு பின் கதையைப் பற்றி பலருக்கு தெரியாது. 

எம்.எஸ். தோனி (MS Dhoni), சாக்ஷியை திருமணம் செய்வதற்கு முன்பு, தோனியின் வாழ்வில் மற்றொரு பெண் இருந்தார். அவரை தோனி மிகவும் நேசித்தார். ஆனால் விதி அவர்கள் இருவரையும் பிரித்தது. தோனியின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தயாரிக்கப்பட்ட 'எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்திலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

தோனியின் காதலி எப்படி இறந்தார்?

தோனியின் முன்னாள் காதலியின் பெயர் பிரியங்கா ஜா. தோனி அவரை மிகவும் நேசித்தார். திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரியங்கா ஒரு கார் விபத்தில் இறந்தார். 

தோனி தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. புகைப்படத்தில் தோனியுடன் இருக்கும் பெண் பிரியங்கா ஜா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ: CSK contract கிடைத்தவுடன் தோனியின் ரியாக்ஷன் எப்படி இருந்தது? சுரேஷ் ரெய்னா கூறுகிறார்

தோனி கிரிக்கெட்டில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார் 
பிரியங்கா ஜா இந்த உலகை விட்டே சென்று விட்டார் என்பதை தோனி அறிந்ததும், அவர் மிகவும் வேதனை அடைந்தார். அந்த செய்தி அவரை வெகுவாக பாதித்தது. தோனியின் நெருங்கிய நண்பர்கள், இந்த துக்கம் காரணமாக தோனி சில காலம் கிரிக்கெட்டில் (Cricket) இருந்து விலகி இருப்பார் என்று நினைத்தார்கள். ஆனால் தோனி அதை தனது பலவீனமாக்கிக்கொள்ளாமல் தனது முழு கவனத்தையும் கிரிக்கெட் விளையாட்டில் செலுத்தினார். அதன் பிறகு அவர் இந்திய அணியை வழி நடத்தி உலகக் கோப்பையை நாட்டுக்கு பெற்றுத்  தந்தார். 

தோனியின் சாதனைகள் 

தோனியின் தலைமையின் கீழ், ஐ.சி.சி உலக டி 20 கோப்பை (World Cup) (2007), கிரிக்கெட் உலகக் கோப்பை (2011) மற்றும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய பட்டங்களை இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, 2009 ல் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முதலிடத்தைப் பிடித்ததும் அவர் தலைமையில்தான்!!

ALSO READ: ஸ்டம்புக்கு பின்னால் எம்.எஸ். தோனியை மிகவும் மிஸ் செய்கிறேன்: குல்தீப் யாதவ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News