'ஏய் ஹெலோ மிஸ்டர் புலி’: கடுப்பேத்திய குரங்குகள், காண்டான புலி, சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

Funny Monkey Video: குரங்குகள் செய்யும் குறும்பால் பாடாய் படும் புலியின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. இதை இணையவாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 5, 2023, 06:58 PM IST
  • விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • நக்கல் குரங்குகளின் வீடியோவை பஇங்கே காணலாம்.
'ஏய் ஹெலோ மிஸ்டர் புலி’: கடுப்பேத்திய குரங்குகள், காண்டான புலி, சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்கு அதிக குறும்பு செய்யும் விலங்காகும். சில சமயங்களில் மற்ற விலங்குகளை கிண்டல் செய்துவிட்டு ஓடிவிடுவதும், சில சமயம் மனிதர்களை மிரட்டி அவர்களது உடைமைகளை பறிப்பதும் இதன் பழக்கம். சிங்கம், சிறுத்தை போன்ற பயங்கர மிருகங்கள் எதிரில் வந்தாலும் குரங்குகளின் குறும்பு அடங்குவதில்லை. குரங்குகளின் குறும்பு பற்றிய பல வீடியோக்களை நாம் சமூக ஊடகங்களில் பார்த்துள்ளோம்.

தற்போது மீண்டும் குரங்கின் குறும்பு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வேட்டையாட வந்த புலியை குரங்குகள் ஏமாற்றுவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. எவ்வளவு முயற்சி செய்தாலும் புலியால் இவற்றை பிடிக்க முடியவில்லை.

குரங்குகள் புலியிடம் செய்த குறும்பு

வைரலாகி வரும் இந்த  வீடியோ-வில் ஏராளமான குரங்குகள் மரத்தின் மீது ஏறிச் செல்வதைக் காண முடிகின்றது. ஒரு புலியும் அங்கே ரகசியமாக வந்து சேருகிறது. அங்கே ஒரு எருமையும் வருகிறது. புலி எருமையை வேட்டையாட விரும்புவதை போல தோன்றுகிறது. ஆனால் குரங்குகள் அதை திசை திருப்ப முயல்கின்றன. சில சமயம் மரத்தில் இருந்து கீழே இறங்குவதும், சில சமயம் மரத்தின் மீது ஏறி ஓடுவதுமாக அவை வேடிக்கை காட்டுகின்றன. புலி எவ்வளவு முயற்சி செய்தும் அவற்றை பிடிக்க முடியவில்லை. அது அப்படியே மரத்தடியில் அமர்ந்து கொள்கிறது.

மேலும் படிக்க | Viral Video: என் ஏரியாவுக்கு வந்து பிலிம் காட்டரீங்களா... கடுப்பான நீர்யானை! 

நக்கல் குரங்குகளின் வீடியோவை பஇங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Waow Africa (@waowafrica)

இந்த வீடியோவில் புலி ஆதரவற்ற நிலையில் இருக்கும் விதம், மிகவும் அரிய காட்சியாக உள்ளது. இப்படி புலி அமர்ந்திர்ப்பதை யாரும் பார்த்திருக்க முடியாது. புலியின் ஒரு பக்கத்தில் குரங்கு கூட்டமும் மறுபுறம் எருமையையும் காண முடிகின்றது. ஆனால், அதனால் எந்த விலங்கையும் பிடிக்க முடியவில்லை. 

இந்த வீடியோ waowafrica என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.  இணையவாசிகள்  இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | ‘அம்மா.. நான் போக மாட்டேன்’: அழ வைக்கும் குரங்கின் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News