‘வாத்துக்கு வாட்டர்மெலன் கொடுத்த வள்ளல்’: கலர் சட்டை குரங்கை கொண்டாடும் நெட்டிசன்ஸ், வைரல் விடியோ

Funny Animal Video: இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். அட்டகாசமான அந்த வீடியோவை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 19, 2023, 03:28 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @TheFigen_ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அந்த வீடியோவை இங்கே காணலாம்.
‘வாத்துக்கு வாட்டர்மெலன் கொடுத்த வள்ளல்’: கலர் சட்டை குரங்கை கொண்டாடும் நெட்டிசன்ஸ், வைரல் விடியோ title=

வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 

பொதுவாக சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. பாம்பு, குரங்கு, நாய், பூனை, யானை, என சில குரங்குகளுக்கு இணையத்தில் ரசிகர் பட்டாளமே உள்ளது என கூறலாம். இந்த மிருகங்களின் வாழ்வில் அருகில் சென்று பார்க்க முடியாத பல வினோத விஷயங்களை நாம் இந்த வீடியோக்களின் மூலம் காண முடிகின்றது. 

குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். சில சமயம் இவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவித்து நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. சில சமயம் மிக கியூட்டான விஷயங்களை செய்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. 

சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற எண்ணமே தோன்றும். இதில் உள்ள குரங்கு இணையவாசிகளின் இதயங்களை சுண்டி இழுத்துவிட்டது என்றே கூறலாம். இது மட்டுமல்லாமல் இந்த வீடியோவில் விலங்குகளுக்கு இடையிலான அழகான ஒரு நட்பையும் பிணைப்பையும் காண முடிகின்றது.

கியூட்டாக சாப்பிடும் குரங்கும் வாத்தும்

இணையத்தில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில் வாத்து குட்டிகளுடன் சேர்ந்து ஒரு குட்டி குரங்கு தர்பூசணி பழம் சாப்பிடுவதை காண முடிகின்றது. ஒரு நபர் ஒரு தர்பூசணி பழத்தை இரண்டாக வெட்டுவதை வீடியோவில் காண முடிகின்றது. அவர் அதில் ஒரு பாதியை வாத்து குட்டிகளுக்கும் ஒரு பாதியை குரங்கு குட்டிக்கும் அளிக்கிறார். வாத்துகள் ஒரு பாதியை சாப்பிட குரங்கு குட்டி தனக்கு கொடுக்கப்பட்ட பாதியை சபபிடுகிறது. 

வாத்து குட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சிரிது நேரத்தில், அதிலிருந்து ஒன்று குரங்கின் அருகில் வந்து அதனுடன் தர்பூசணி பழத்தை உண்ணத் தொடங்குகிறது. குரங்கு அதற்கு எந்த வித மறுப்பையும் தெரிவிக்காமல் அதனுடன் பகிர்ந்து உண்கிறது. இந்த காட்சி காண்பதற்கு மிக அழகாக உள்ளது. பொதுவாக குரங்குகள் மற்றவர் கையில் இருப்பதையே பிடுங்கித் தின்றுவிடும் குணம் கொண்டுள்ள விலங்குகள். ஆனால், தன் பங்கிலேயே கை வைக்க வாத்து வந்தும், அது உண்பதற்கு வழி விட்டு, அது உண்பதை பார்த்து மகிழ்ந்த குரங்கை பார்க்க ஆச்சரியமாக உள்ளது.  

மேலும் படிக்க |  19 அடி நீள மலைப்பாம்புடன் அசால்ட்டு செய்த நபர்: வைரல் வீடியோ

மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @TheFigen_ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். அந்த குரங்கு அனைவரது நெஞ்சங்களிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளது. 

மேலும் படிக்க |  எஜமானுக்காக குடையுடன் காத்திருக்கும் நாய், கண்ணீர் சிந்தும் நெட்டிசன்ஸ்: மனதை உருக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News