’சும்மா இருந்தவனை சொறிஞ்சா இப்படி தான்’ குசும்பு செய்து வாங்கிகட்டிக்கொண்ட குரங்கு - வைரல் வீடியோ

குரங்கு ஒன்று குசும்பு தனத்தால் சும்மா இருந்த கீரிகளிடம் வம்பிழுத்து வாங்கிக் கட்டிக்கொள்ளும் வீடியோ காண்போருக்கு சிரிப்பை வரவைக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 6, 2023, 06:13 PM IST
  • குசும்பு செய்யும் குரங்கு
  • கோபப்பட்ட கீரிபிள்ளை
  • ஜெட் வேகத்தில் பின்வாங்கிய குரங்கு
’சும்மா இருந்தவனை சொறிஞ்சா இப்படி தான்’ குசும்பு செய்து வாங்கிகட்டிக்கொண்ட குரங்கு - வைரல் வீடியோ title=

குரங்களுக்கு இயல்பாகவே குசும்பு தனம் அதிகமாக இருக்கும். துறுதுறுவென இருக்கும் குரங்குகள் வம்பிழுத்து விளையாடுவதில் கில்லாடி. சாலையில் அல்லது கோயில்களுக்கு நீங்கள் செலும்போது, அதுவும் மலைப்பகுதியாக இருந்துவிட்டால் அங்கு இருக்கும் குரங்குகள் உங்களை தனியாக நடந்து செல்லவே விடாது. கையில் ஏதாவது கொண்டு சென்றால் அதற்கு கொடுத்துவிட்டு தான் செல்ல முடியும். உங்களிடம் பர்மிசன் எல்லாம் அது கேட்காது. பையை பார்த்துவிட்டால் எங்கிருந்து வேண்டுமானாலும் ஓடி வந்துவிடும். ஒன்று இரண்டெல்லாம் இருக்காது, சுமார் நான்கைந்து குரங்குகள் சேர்ந்து கொண்டு சுற்றி வளைத்துவிடும். பையை கீழேபோடும் வரை விடாது.

மேலும் படிக்க | ’பங்காளி அந்த பக்கம் கொஞ்சம் கூசுப்பா’ பாசத்தால் சிங்கத்தை உருக வைக்கும் நாய்: வைரல் வீடியோ

சரி மனிதர்களாகிய நம்மிடம் தான் இப்படி சேட்டை செய்கிறது என்றால் மற்ற விலங்குகளிடமும் இதே சேட்டையை தான் செய்து கொண்டிருக்கும். அப்படியா என நீங்கள் கேட்டால், கொஞ்சம் யூ டியூப் சென்று குரங்களின் சேட்டை வீடியோவில் தேடிப் பாருங்கள். ஏராளமான வீடியோக்கள் இருக்கும். அண்மையில் ஒரு வீடியோ பார்க்க நேரிட்டது. அதில், மரத்தின் மீது புலி ஒன்று ஏறி படுத்திருக்கிறது. இதனைப் பார்த்த குரங்கு ஒன்று கிளை கிளையாக தாவி தாவி புலிக்கு அருகில் வந்து, அதனிடம் வம்பிழுக்கிறது. முதல் தடவை வம்பிழுத்துவிட்டு அடுத்த கிளைக்கு தாவும்போது புலி பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யாமல் அமைதி காக்க மீண்டுமொருமுறை வந்து குரங்கு அதனை சீண்டுகிறது. இம்முறை புலிக்கு பயங்கர கோபம் வந்துவிட, எப்படியாவது குரங்கை பிடித்துவிட வேண்டும் என ஆவேசத்தில் தாவுகிறது. 

அப்போது குரங்கு டக்கென்று மற்றொரு கிளைக்கு தாவி தப்பிச் சென்றுவிட, புலி மரத்தின் உச்சியில் இருந்து பொத்தென கீழே விழுகிறது. அந்த நேரத்தில் புலிக்கு இருக்கும் மனநிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள். அதற்கு சற்றும் குறைவில்லாத சேட்டையை தான் இந்த வீடியோவிலும் குரங்கு ஒன்று செய்கிறது. அதாவது பூங்கா ஒன்றில் இருக்கும் சிம்பன்சி குரங்கு அதன் பக்கத்தில் இருக்கும் இரண்டு கீரிப்பிள்ளைகளிடம் சென்று வேண்டுமென்றே செடிக் கொத்துகளை கொண்டு அடித்து வம்பிழுக்கிறது. 

பொறுமையாக இருந்த கீரிப்பிள்ளைகளுக்கு சட்டென கோபம் அதிகமாக வந்துவிட, குரங்கை கடிப்பதற்காக ஓடுகின்றன. இதில் குரங்கு கொஞ்சம் அடித்தான் போனது என்றாலும் அதனுடைய குசும்பு தனம் குறைந்ததாக தெரியவில்லை. @buitengebieden என்ற டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ மட்டும் சுமார் 11 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. 

மேலும் படிக்க | இணையத்தை தெறிக்கவிட்ட ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News