‘வேண்டாம்...விட்டுடு’: கெஞ்சிய குரங்கு, மிஞ்சிய சிறுவன், வைரலான வீடியோ

Funny Animal Video: இன்று வரை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நடக்கும் பல மோதல்களை நாம் பார்த்துள்ளோன். ஆனால், இந்த வீடியோ மிகவும் வித்தியாசமாக உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 24, 2022, 05:06 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
‘வேண்டாம்...விட்டுடு’: கெஞ்சிய குரங்கு, மிஞ்சிய சிறுவன், வைரலான வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே காதல் அதிகம். நாய், குரங்கு, பூனை போன்ற விலங்குகளை மக்கள் செல்ல பிராணிகளாக வளர்க்க விரும்புகிறார்கள். இந்த விலங்குகள் தங்கள் உரிமையாளர் மீது மிகுந்த அன்பைப் பொழிகின்றன. அவர்களை பாதுகாக்க அதிகமான அக்கறை எடுத்துக்கொள்கின்றன. 

மேலும் படிக்க | திடீரென கூச்சலிட்ட மணமகள்: அப்படி என்னத்ததான் பார்த்தாங்க? வைரல் வீடியோ 

மனிதர்களும் இந்த விலங்குகள் மீது அதிக அளவு பாசத்தை காட்டுகிறார்கள். இருப்பினும், சில சமயங்களில் விலங்குகளும் மனிதர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம். இது தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதில் ஒரு சிறுவன் காட்டில் லங்கூர் குரங்குடன் சண்டையிடுவதைக் காண முடிகிறது. இருவரும் ஒருவரை இருவர் கடுமையாக தாக்கிக்கொள்கிறார்கள். 

லாங்கூருடன் சண்டையிடும் சிறுவன்
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், காட்டில் சிறுவன் ஒருவன் முன்னால் அமர்ந்திருந்த லங்கூர் அருகே செல்வதையும், அப்போது லங்கூருக்கும் சிறுவனக்கும் இடையே சண்டை வருவதையும் காண முடிகின்றது. 

சிறுவன் லங்கூரை தூக்கி தூரமாக தள்ள முயற்சிக்கிறான், மறுபுறம், லங்கூரும் தொடர்ந்து தாக்குகிறது. இருவருக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடக்கிறது. இறுதியில் சிறுவன் வெற்றி பெறுகிறான். சில நொடிகளே கொண்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

லங்கூருக்கும் சிறுவனுக்கும் இடையில் நடக்கும் சண்டையின் வீடியோவை இங்கே காணலாம்:

நம் கண்களையே நம்ப முடியாது
இன்று வரை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நடக்கும் பல மோதல்களை நாம் பார்த்துள்ளோன். ஆனால், இந்த வீடியோ மிகவும் வித்தியாசமாக உள்ளது. பள்ளி மாணவர்கள் சண்டை போட்டுக்கொள்வதை போல சிறுவனும் லங்கூர் குரங்கும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இந்த காணொளியில் உள்ள வியப்பூட்டும் காட்சியைக் கண்டு அனைவரும் திகைத்து நிற்கின்றனர். 

இந்த வீடியோ dalpat__rana_21 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை பல வியூஸ்களும் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | Viral News: 11 லட்சம் ரூபாய் செலவழித்து நாயாக மாறிய நபர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News