விருகம்பாக்க பிரியாணி உணவக தகராறு; ஸ்டாலின் அதிரடி முடிவு!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில், திமுக உறுப்பினர்கள் சிலர் குழுவாக கடை உரிமையாளரை தாக்கியுள்ளனர். 

Last Updated : Aug 1, 2018, 06:31 PM IST
விருகம்பாக்க பிரியாணி உணவக தகராறு; ஸ்டாலின் அதிரடி முடிவு! title=

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில், திமுக உறுப்பினர்கள் சிலர் குழுவாக கடை உரிமையாளரை தாக்கியுள்ளனர். 

கடந்த 28-ஆம் தேதி நடைப்பெற்ற இச்சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தன்று  பூட்டப்பட்டிருந்த நிலையில் இருந்த கடையின் ஷட்டரை திறக்கச் சொல்லி  உள்ளே புகுந்த இந்த குழு உணவக ஊழியர்களை தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தின் காட்சிகளானது கடையில் பொருத்தப்பட்டு இருந்து CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளின் உதவியுடன் கடையின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட திமுக உறுப்பினர்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"சென்ன தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் வடக்கு பகுதியை சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News