ஒரே இடி.. காரின் மேல் போய் விழுந்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ

Scary Accident Video: சாலைகளில், வீடுகளில், மற்ற கட்டிடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் விபத்துகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகின்றன

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 2, 2023, 12:26 PM IST
  • இந்த வீடியோ fun_and_masti_3 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.
  • இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
ஒரே இடி.. காரின் மேல் போய் விழுந்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

இணைய உலகில், சமூக ஊடகங்கள் ஒரு மிகப்பெரிய கேளிக்கை மற்றும் தகவல்களுக்கான தளமாக உள்ளது. இங்கு எது வைரல் ஆகும் என்பதை யாராலும் ஊகிக்க முடியாது. அதிலும் குறிப்பாக பல அச்சுறுத்தும் வீடியோக்களும் இங்கு அதிகம் வைரல் ஆகின்றன. இவற்றை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியாது. இணையத்தில் பல விபத்துகளின் வீடியோக்களும் பகிரப்படுகின்றன.

காரில் மோதிய பைக்

சாலைகளில், வீடுகளில், மற்ற கட்டிடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் விபத்துகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகின்றன.  தற்போது மீண்டும் ஒரு விபத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதில் பெண் ஒருவர் காரை ஓட்டி வருவதை காண முடிகின்றது. சிவப்பு விளக்கு எரிந்தவுடன் சிக்னலில் அவர் காரை நிறுத்தினார். அவர் பின்னால் ஒருவர் ஒரு பைக் ஓட்டிக்கொண்டு வருகிறார். அவரது நினைவு எங்கிருந்ததோ தெரியவில்லை. அவர் நேராக வந்து கார் மீது மோதுகிறார். 

காரில் மோதிய வேகத்தில் அந்த நபர் காரின் மேலே போய் விழுகிறார். முதலில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. காரை ஓட்டிக்கொண்டு வந்த பெண்ணுக்கும் ஒன்றும் புரியவில்லை. திடீரென்று ஒரு வாகனம் தன் காரின் மீது இடித்ததை உணர்ந்த அவர் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். அவர் காரிலிருந்து கீழே இறங்கி என்ன நடந்தது என புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். அதற்குள் அந்த நபரும் காரின் மேல் பகுதியிலிருந்து மெதுவாக கீழே இறங்குகிறார்.

மேலும் படிக்க | திருட வந்த தம்பிகளுக்கு வந்த சோதனை: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

விபத்தின் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@fun_and_masti_3)

பைக் மோதிய வேகத்திலும், அந்த நபர் காரின் மீது விழுந்த தாக்கத்திலும் காரின் கண்ணாடி நொறுங்கியுள்ளதை வீடியோவில் காண முடிகின்றது. அந்த பெண் டிரைவருக்கும் திடீரென என்ன ஆனது என்று ஒன்றும் புரியவில்லை. மற்றொரு பக்கம், அந்த நபரைப் பார்த்தால், அவருக்கு அதிக காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. 

வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ fun_and_masti_3 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

சமீபத்தில் வைரல் ஆன மற்றொரு விபத்து வீடியோ

சாலையில் காரை ஓட்டும் ஒரு பெண், அதிக வாகனங்கள் இல்லாமல் வேகமாக கார் ஓட்ட சாலையில் வாய்ப்பு கிடைத்தவுடனே, காரை வேகமாக ஓட்டுகிறார். வேகமாக காரை ஓட்டி சாலையை கடக்க முயல்கிறார். ஆனால், தன் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறார். இதனால் பெரும் விபத்து ஏற்படுகிறது. சாலையில் இருந்த சுவரில் காரை இடித்த பெண் பெரும் பீதிக்கு ஆளானார். ஆனால், உடனேயே அவர் காரிலிருந்து இறங்கி ஓட்டம் பிடிக்கத் துவங்கினார். அவர் காரை கொண்டு மோதிய செங்கல் சுவர் உடைந்து சிதறுவதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த சம்பவம் முழுவதும் சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ’தலைக்கு தில்ல பார்த்தியா..’ முதலையிடம் வம்பு இழுக்கும் வாத்து: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News