கழுதைப்புலியை கட்டிப்பிடித்த நபர்..! அய்யய்யோ..அடுத்து என்னாச்சு? வைரல் வீடியா!

Viral Video Of Man With Hyena: ஒரு நபர், கழுதைப்புலியை கட்டிப்பிடித்த படி தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Nov 5, 2023, 02:43 PM IST
  • கழுதை புலிகள் காட்டு விலங்குகளுள் ஒன்று.
  • இதன் அருகில் செல்லவே பலர் பயப்படுவர்.
  • ஒருவர் இதை கட்டிப்பித்து வீடியோ போட்டுள்ளார்.
கழுதைப்புலியை கட்டிப்பிடித்த நபர்..! அய்யய்யோ..அடுத்து என்னாச்சு? வைரல் வீடியா! title=

பல்வேறு கண்டங்களை கொண்டு மிகப்பெரிய அண்டமாக இருக்கும் இந்த உலகில் பல ஜீவராசிகள் வாழ்ந்து வருகின்றன. இவ்வுலகம் எவ்வளவு பெரியது என்றாலும் நமது கைகளில் உள்ள சிறிய கைப்பேசி அதை நம் கைக்குள் சுருக்கி விட்டது. இது தவிர, நாம் அனைவரும் உபயோகிக்கும் சமூக வலைதளங்கள் அனைத்தும் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே இருக்கிறது. இந்த சமூக வலைதளங்களின் வாயிலாக பல சமயங்களில் அதிர்ச்சிகரமான விஷயங்களையும் ஆச்சரியமூட்டும் தகவல்களையும் நம்மால் அறிந்து காெள்ள முடிகிறது. அப்படி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது. காட்டில் வாழும் வேட்டை விலங்குகளை பார்த்தால் நமது உள்ளூர நடுங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், ஒரு சிலர் அப்படி மனிதர்களையே விழுங்கி விடும் காட்டு விலங்குகளுக்கே ஆட்டம் காட்டுகின்றனர். அவற்றிற்கு டிரைனிங் கொடுத்து தான் சொல்லும் பேச்சை கேட்க வைக்கின்றனர். அப்படி, ஒரு கொடூர விலங்கான கழுதைப்புலியை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு அமர்ந்து கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | பிக்பாஸ் 7: பிரதீப்பை தொடர்ந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்! யார் தெரியுமா?

கழுதைப்புலியை கட்டிப்படித்த நபர்..

மனதைக் கவரும் விலங்கு-மனித தொடர்புகள் நிறைந்த உலகில், சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. வீட்டில் வளர்க்கும் விலங்குகளுடன் பலர் கட்டிப்பிடித்தப்படி உறங்குவதை பார்த்திருப்போம். ஆனால், சங்கிலியால் கட்டப்பட்ட ஹைனாவை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் வீடியோ அதை பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jasem Ali (@uae_lionking)

பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது 2 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்களை பெற்றுள்ளது. இந்த காட்டு விலங்குகள் முற்றிலும் வேட்டையாடுபவர்கள் என்ற பொதுவான நம்பிக்கையை மீறி, ஒரு மனிதன் பயமின்றி அரவணைத்து, ஹைனாவை நோக்கி அன்பை வெளிப்படுத்துவதை வீடியோ கிளிப் படம் பிறருக்கு காண்பிக்கிறது. இதுபோன்ற ஒரு அசாதாரண தொடர்பைப் பார்த்தது நெட்டிசன்கள் திகைத்து போயுள்ளனர்.

நெட்டிசன்களின் ரியாக்ஷன்..

இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல வகையான கருத்துகளை கூறி வருகின்றனர். ஒரு சிலர் அந்த மனிதரின் தைரியத்தை பாராட்ட ஒரு சிலர் தங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவே தங்களுக்கு பயமாக இருப்பதாக கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | கொடூர புலியை கட்டியிழத்து கெத்து காட்டும் சிறுவன்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News