Alligator Video: வேஷம் போட்டாலும் முதலையை போல காதல் செய்ய முடியுமா? வீடியோ வைரல்

Crocodile Viral Video: குறும்புத்தனத்தைக் காட்டும் முதலை வீடியோ! எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு பார்த்துக்கோ! பொறுமையை கடைபிடிக்கும் முதலையை பார்த்ததுண்டா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 10, 2022, 01:22 PM IST
  • சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் முதலைகள் வீடியோ.
  • மேக்கப் போட்டாலும் மனிதன் முதலையாக முடியாது
  • முதலையைச் சீண்டும் மனிதக் குறும்பு
Alligator Video: வேஷம் போட்டாலும் முதலையை போல காதல் செய்ய முடியுமா? வீடியோ வைரல் title=

Crocodile Viral Video: விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் எப்போதும் எவர்க்ரீன் வைரல் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இவற்றில் சில பயத்தை ஏற்படுத்தினால், சில வியப்பளிக்கும். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில் பல வீடியோக்கள் வித்தியாசனமானதாகவும் நாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதவைகளாகவும் இருக்கின்றன. ஆனால், அவை பார்ப்பதற்கு சுவராசியமாக இருப்பதால், பலரும் பார்த்து ரசிக்கின்றனர். அதிலும், நிலத்திலும், நீரிலும் வாழும் முதலை வீடியோக்களில் பெரும்பாலானவை அச்சத்தையே ஏற்படுத்தும்.

ஆனால், தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகும் ஒரு முதலை வீடியோ, குறும்புத்தனத்தைக் காட்டுகிறது. குறும்பை ரசித்தாலும், அதன் பின்னால் இருக்கும் ஆபத்தை நினைத்தால் மனம் பதறுகிறது. இருந்தாலும், சமூக ஊடக உலகில் எந்த செய்தி அதிகம் பார்க்கப்படும் என்பது பற்றி யாரும் எதுவும் சொல்ல முடியாது. வேடிக்கையான வீடியோக்களை உருவாக்கும் பணியில் சிலர் உயிரைப் பணயம் வைக்கின்றனர். இது போன்ற பல வீடியோக்கள் இருந்தாலும் இந்த வீடியோ வித்தியாசமாக இருக்கிறது.

மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

வீடியோவில் இரு முதலைகள் நீர்நிலைக்கு அருகில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. வைரலாகி வரும் வீடியோ தொடங்கிய சில நொடிகளில், ஒரு கை நீண்டு, தனக்கு அருகில் இருக்கும் முதலையை சீண்டுகிறது. அப்போது தான், இது ஒரு குறும்புக்காரர் ஏன், அது குறும்புக்காரியாகக் கூட இருக்கலாம் என்று புரிகிறது. முதலை உடை அணிந்த ஒருவர், நீர்நிலைக்கு அருகில் உள்ள முதலையின் அருகில் படுத்திருக்கிறார் என்பதைப் பார்த்ததும் முதலில் ஆச்சரியமாக இருக்கிறது.

முதலையை சீண்டலாமா?

வைரலாகும் இந்த வீடியோவில், தண்ணீரில் இருந்து வெளியே வந்த முதலை, ஓய்வெடுத்துக் கொண்டு இருப்பதை காணலாம். ஒரு நபர் முதலையப் போல வேஷம் அணிந்து அங்கு வந்து அதற்கு பக்கத்தில் படுத்துக் கொள்கிறார். சிறிது நேரம் கழித்து  கைகளை மெதுவாக நீட்டி, முதலையை தொட்டுத் தொட்டு விளையாடுகிறார். அதன்பிறகு என்ன நடந்தது? நீங்களே வீடியோவைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

முதலை தொடர்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதை @NarendraNeer007 என்ற ட்விட்டர் பயனரும் பகிர்ந்துள்ளார். சில நொடிகள் மட்டுமே செல்லும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களும் கடுமையாக ரியாக்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: சிங்கத்திடம் தப்பி முதலையிடம் மாட்டிக் கொண்ட எருமை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News