விலங்குகளின் ‘நண்பேண்டா’ மொமண்ட்: இணையவாசிகளின் இதயத்தை உருகவைத்த வீடியோ

Animal Love Viral Video: இடையிடையே, விலங்குகள் பாச மிகுதியால் கொஞ்சிக்கொள்வதையும் வீடியோவில் காண முடிகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 20, 2022, 06:02 PM IST
  • சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது.
  • இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.
  • விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
விலங்குகளின் ‘நண்பேண்டா’ மொமண்ட்: இணையவாசிகளின் இதயத்தை உருகவைத்த வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இன்றைய சமூகத்தில் பல சமூக விரோதிகள் சாதி, மதம் மற்றும் பிரதேசத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் பணிகளை செய்து வருகிறார்கள். இதனால் மத நல்லிணக்கம் அவ்வப்போது சீர்குலைந்து விடுகின்றது. எனினும், இதற்கு மாறாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் மிருகங்களின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் மனிதர்களுக்கும், இந்த வீடியொ ஒற்றுமைக்கான ஒரு பாடமாக இருக்கும். 

சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவில், சில விலங்குகள் ஒன்றாக காணப்படுகின்றன. இதைப் பார்த்து அனைவரும் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். நாய்கள் மற்றும் பூனைகள் பொதுவாக ஒன்றுக்கொன்று எதிரிகளாக கருதப்படுகின்றன. அவை நேர் எதிரே வந்தாலே மோதல்தான் ஏற்படும். ஆனால், இந்த வீடியோவில் இதற்கு நேர் எதிரான ஒரு காட்சியை காண்கிறோம். மேலும் இந்த வீடியோவில் ஒரு மானும் மிக அமைதியாக தனது விலங்கு நண்பர்களுடன் பொழுதை கழிப்பதை வீடியோவில் பார்க்கிறோம். 

வீடியோ வைரலானது

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை Narendra Singh என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு மான் தரையில் வசதியாக அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அதைச் சுற்றி ஒரு நாய் மற்றும் பூனையையும் காண முடிகின்றது. இவை உல்லாசமாக, அமைதியாக தங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை ஒன்றோடு ஒன்று செலவழிப்பது போல தோன்றுகிறது. 

மேலும் படிக்க | மாஸ்டர் பிளான் போட்டு தப்பித்த பசுமாடு: பல்பு வாங்கிய சிங்கங்கள், வைரல் வீடியோ 

இடையிடையே, விலங்குகள் பாச மிகுதியால் கொஞ்சிக்கொள்வதையும் வீடியோவில் காண முடிகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக உள்ளது. வீடியோவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த விலங்குகளுக்கு இடையே காணப்படும் பரஸ்பர அன்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சகோதரத்துவம் கற்பிக்கும் வீடியோ

வீடியோவில், பூனைக்குட்டி மானுடன் விளையாடுவதையும், அதை அரவணைப்பதையும் காண முடிகின்றது. பூனை தன் குழந்தைக்கும் மானுடன் விளையாட சுதந்திரம் கொடுக்கிறது. எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. சமூகத்தில் அன்புடனும் சகோதரத்துவத்துடனும் வாழ கற்றுக்கொடுக்கும் வகையில் இந்த வீடியோ உள்ளது. 

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். அந்த வீடியோவை பார்த்ததும் இணையவாசிகளின் இதயம் உருகியுள்ளது. சகோதரத்துவத்துக்கான ஒரு சிறப்பான பாடத்தை புகட்டும் வீடியோவாக இது உள்ளது.

மேலும் படிக்க | அம்மானா சும்மாவா: பாம்பை பதம் பார்த்த கோழி, ஆச்சரியத்தில் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News