நடுரோட்ல சிங்கங்களின் ரொமான்ஸ்: டிராப்பிக்கில் சிக்கிய வாகனங்கள் - வீடியோ வைரல்

கொடூர வேட்டை விலங்காக தெரியும் சிங்கங்கள் ரொமான்ஸ் செய்யும் அழகான காட்சியை பார்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது. அப்படி காட்டுக்குள் இருக்கும் சாலையில் படுத்து ஜாலியாக இருக்கும் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 6, 2023, 12:43 PM IST
  • இரு சிங்கங்களின் ரொமான்ஸ்
  • காட்டுக்குள் டிராப்பிக்கில் சிக்கிய கார்
  • கியூட் வீடியோ இணையத்தில் வைரல்
நடுரோட்ல சிங்கங்களின் ரொமான்ஸ்: டிராப்பிக்கில் சிக்கிய வாகனங்கள் - வீடியோ வைரல் title=

சிங்கம் புலி என்றாலே மனதுக்குள் ஒருவித பயமும், பதற்றமும் தொற்றிக்கொள்ளும். இனம் புரியாத பயத்துக்கு காரணம் அவை குறித்து பள்ளிப் புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கும் கொடூர வேட்டை விலங்கு என்ற அர்த்தம் தான். காட்டு ராஜா சிங்கம் எந்த விலங்கையும் வேட்டையாடிவிடும், புலி மரம் ஏறுவது முதல் தண்ணீரில் நீந்தி செல்வது வரை என அனைத்து வித்தையும் தெரியும், அதனால் அவற்றின் கண்ணில் பட்டுவிட்டால் தப்பிக்கவே முடியாது என சொல்லவும், படிக்கவும் செய்திருப்போம். ஆனால் அவற்றுக்கும் இன்னொரு முகமும் இருக்காது. புலி பசியில் இருக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அநாவசியமாக வேட்டையாடாது. சிங்கத்தில் பெண் சிங்கம் தான் வேட்டையாடும். 

மேலும் படிக்க | அன்பில் உருகும் யானையின் பரிவு! வெட்கி தலைகுனிய வேண்டாமா? வீடியோ வைரல்

இது பலருக்கும் புதியதாக இருக்கலாம். காட்டில் இதுதான் வாழ்க்கை முறை. சிங்கங்கள் பொதுவாக மிகவும் ஜாலியாக விளையாடக்கூடிய விலங்கு. கூட்டமாக இருக்கும்போது சிங்க கூட்டத்துக்குள்ளாகவே ஓடியாடி கடித்து உருண்டு விளையாடும். அப்படியான காட்சிகளை பார்ப்பது எல்லாம் அபூர்வம். காட்டுக்குள் சுற்றுலா செல்லும்போது கூட காணக்கிடைக்காத அதிசய அனுபவமும் கூட. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு அமைந்துவிடாது. ஆனால், வாய்ப்பு கிடைப்பவர்கள் அந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து கொள்வது என்றென்றும் நினைவில் இருக்கும். அப்படியான வீடியோ தான் இப்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்றவர்கள் காட்டு வழியில் சஃபாரி வாகனத்தில் சென்றிருக்கின்றனர்.

அப்போது வழியிலேயே படுத்திருந்த சிங்கங்கள் இரண்டு ஒன்றுக்கு ஒன்று முத்தம் கொடுத்து ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்திருக்கின்றன. உடனே வாகனத்தை நிறுத்திய சுற்றுலாப் பயணிகள் சிங்கங்களுக்கு மிக அருகாமையில் இருந்து அவற்றின் ரொமான்ஸை பார்த்து ரசித்திருக்கின்றனர். அப்போது திடீரென இன்னொரு சிங்கம் ஓடிவந்து அந்த இரு சிங்கங்களுடன் இணைந்து விளையாடுகிறது. இந்த வீடியோ @fasc1nate என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. 2.8 மில்லியன் பார்வைகளைப் பெற்று அதிகம் ரசிக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றாகவும் உள்ளது. 

மேலும் படிக்க | கிளைமேக்ஸில் என்ட்ரியாகி கடத்தல்காரர்களுக்கு செக் வைத்த நாய் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News