தாத்தா VS பேரன்: கிரிக்கெட்டில் பந்து வீச்சாளராக கருணாநிதி: வைரல் வீடியோ!

கொள்ளுப் பேரனுடன் தி.மு.க தலைவர் கருணாநிதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் விரலாக வலம்வருகிறது. 

Last Updated : Mar 1, 2018, 11:37 AM IST
தாத்தா VS பேரன்: கிரிக்கெட்டில் பந்து வீச்சாளராக கருணாநிதி: வைரல் வீடியோ! title=

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 1 வருடமாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனை மற்றும் தனது கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சமீபமாக நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. கருணாநிதிக்கு தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை எடுத்து விட்டு அவருக்கு பேச்சு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது உடல் நலம் நன்கு தேறி வரும் நிலையில், கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி அளிப்பதற்காக மு.க.தமிழரசனின் பேரனும், நடிகர் அருள்நிதியின் 2-வயது மகனுமான மகிழனை அழைத்து வந்து மாலையில் அவருடன் விளையாட்டு காட்டி பேச வைத்து வருகின்றனர். கருணாநிதியின் பேச்சு பயிற்சிக்கு உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியன் பேரில், மாலையில் மகிழனுடன் கருணாநிதி மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்தனர். 

இந்நிலையில், கருணாநிதி தனது கொள்ளுபேரன் மகிழனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மகிழன் பேட்டிங் செய்ய கருணாநிதி நாற்காலியில் அமர்ந்தவாறு பந்து போடுகிறார்கள். அப்போது, துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசன் உள்ளிட்டோர் உள்ளனர்.

உங்களுக்காக அந்த வீடியோ இதோ.....!  

 

 

Trending News