சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெறு நகரங்களில் போக்குவரத்தை சமாளிப்பது என்பது சாதாரன விஷயம் இல்லை. அந்த இக்கட்டான வேலையினை சாமார்தியமாக செய்யும் போக்குவரத்து காவல் அதிகாரிகளை பாராட்டியே ஆகவேண்டும்.
இந்த பெறு நகரங்களில் மட்டுமல்ல, அனைத்து நகரங்களிலும் இதே நிலமை தான்!, இருப்பினும் இந்த போக்குவரத்து பிரச்சனைகள் ஓய்ந்த பாடில்லை.. ஒருவேலை இந்த பணியை சற்று வித்தியாசமாக செய்தால் பிரச்சனைகளை குறைக்க முடியுமா?.. முடியும் என நிரூபத்தித்துள்ளார் இந்தோரைச் சேர்ந்த போக்குவரத்து காவல் அதிகாரி.
இந்தோர் பகுதியைச் சேர்ந்த போக்குவரத்து காவல் அதிகாரி ராஜிட் சிங். மைக்கல் ஜாக்ஸனின் தீவிர ரசிகரான இவர் அவரின் நடன பாவனைகளை அப்படியே பிரதிபலித்து சாலை போக்குவரத்து நெரிசலை சரிசெய்கின்றார். இவரது நடவடிக்கைகளையும் இவர் தொடர்ந்து தனது பேஸ்புக்கில பதிவிட்டு வருகின்றார் இதனால், பேஸ்புக் பக்கத்தில் இவரை தொடர்வோரின் எண்ணிக்கை தற்போது 50,000 தாண்டியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இவரது வீடியோ பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது!
Indian traffic cop Ranjeet Singh has become a social media phenomenon with nearly 50,000 people following his activities on Facebook. Singh claims the number of traffic violations at the intersection where he spends most days has fallen over the years. https://t.co/kXf82goEaW pic.twitter.com/jeUzZxQTDP
— AFP news agency (@AFP) December 28, 2017