தினமும் கடலை மிட்டாய் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ உடனே வீடியோவை பாருங்கள்

நீங்கள் கடலை மிட்டாய் பிரியர்களா? ஆம் என்றால் கண்டிப்பாக இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள். கடலை மிட்டாய் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 31, 2023, 06:41 PM IST
  • வைரலான வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
  • கடலை மிட்டாய் இவ்வளவு அழுக்காக செய்யப்படுகிறதா
தினமும் கடலை மிட்டாய் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ உடனே வீடியோவை பாருங்கள் title=

இன்றைய வைரல் வீடியோ: நீங்கள் கடலை மிட்டாய் பிரியர்களா? ஆம் என்றால் கண்டிப்பாக இந்த வீடியோவை ஒரு முறை பாருங்கள். கடலை மிட்டாய் தயாரிக்கும் தொழிற்சாலையின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்பவர் கடலை மிட்டாய் தயாரிக்கும் விதம் உங்கள் மனதை அதிர்ச்சியடைய வைக்கும். கடலை மிட்டாயை வெறுங்காலுடன் செய்யும் பார்வை மிகவும் தரம் குறைந்ததாகும்.

கடலை மிட்டாய் தயார் செய்யும் தொழிற்சாலை:
கடலை மிட்டாய் செய்யும் இந்த வீடியோவை (Viral Video Tamil) லட்சுமிகுஞ்சி என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், வெறும் தரையில் வெல்லம் மற்றும் வேர்க்கடலை சமைத்த கலவை பரப்பப்பட்டது. வெல்லம் மற்றும் வேர்க்கடலை பரப்பப்பட்ட இடத்தில் அங்கு வேலை செய்பவர் வெறுங்காலுடன் நடப்பதைக் காணலாம். மேலும் மற்றொருவர் கலவையை வெறும் தரையில் பரப்புகிறார். இது ஒரு ரோலில் உருட்டப்பட்டு பின்னர் வெட்டப்படுகிறது. மற்றொரு தொழிலாளி அதை உருட்டுவதைக் காணலாம். இதற்குப் பிறகு, அவை தரையில் தனியாக வைக்கப்படுகிறது. பின்னர் அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேகரிக்கத் தொடங்குகின்றன.

மேலும் படிக்க | ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்த யானை! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தொழிற்சாலையில் கடலை மிட்டாய் தயாரிக்கப்படும் வீடியோவை இங்கே காணுங்கள்:

வைரலான இந்த வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்:
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் (Instagram Viral Video) வெளியிடப்பட்ட இந்த வீடியோவுக்கு பல கமெண்ட்கள் வருகின்றன. இதனுடன், இதில் கடலை மிட்டாய் தயாரிக்கும் முறையைப் பார்த்து மக்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுகிறார்கள், மேலும் கடலை மிட்டாய் இவ்வளவு அழுக்காக செய்யப்படுகிறதா என்று ஆச்சரியப்பட்டு தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வீட்டிலேயே தரமான கடலை மிட்டாய் செய்து சாப்பிடலாம்:
எனவே இனி தரம் இல்லாத கடலை மிட்டாயை (Jaggery Chikki) வெளியில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே செய்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். இப்போது நாம் வீட்டிலேயே எவ்வாறு கடலை மிட்டாய் செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - 1 கப்
எள்ளு - 1/2 கப்
வெல்லம் - 1/2 கப்
நெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் வேர்க்கடலை மற்றும் எள்ளை சுத்தம் செய்து கடாயில் போட்டு சரியான பதத்திற்கு வறுத்தெடுத்து தனியாக வைக்கவும். அதே கடாயில் இப்போது, வெல்லத்தைப் போட்டு வெல்லப்பாகு தயார் செய்யவும். பாகு சரியான பதத்திற்கு வந்ததும் அதில் வறுத்த வேர்க்கடலை மற்றும் எள்ளு சேர்த்து நன்கு கிளறவும். பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி இந்த கலவையை அதில் கொட்டவும். அடுத்து, கத்தியை வைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஆற விடவும். இப்போது சுவையான கடலை மிட்டாய் தயார்.

 

மேலும் படிக்க | இந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள்.. இனி பானி பூரி வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News