'முடிஞ்சா தொட்டுப்பார்.....' என பாம்பை பதறவைத்த கோழியின் வைரல் வீடியோ

பாம்பு முட்டையை எடுக்க தனது பெரிய வாயைத் திறந்தவுடன், கோழி இந்த பாம்பை குத்துகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 28, 2022, 06:02 PM IST
  • ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
  • வீடியோவில், ஒரு கோழி தனது முட்டைகளை காப்பாற்ற ஒரு பயங்கரமான பாம்புடன் சண்டையிடுவதைக் காண முடிகின்றது.
  • அனைவரும் கோழியின் தாயன்பையும் தைரியத்தையும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
'முடிஞ்சா தொட்டுப்பார்.....' என பாம்பை பதறவைத்த கோழியின் வைரல் வீடியோ  title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல விஷயங்களை செய்கிறாள். அவர்களுக்காக உலகின் அனைத்து துக்கங்களையும், வலிகளையும் தான் தாங்கிக்கொள்கிறாள். எந்த தீங்கும் தன் குழந்தைகளின் அருகில் கூட செல்லாமல் பார்த்துக்கொள்கிறாள். 

மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, தாயின் உணர்வுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல உதாரணம்.

ALSO READ | அம்மானா சும்மாவா? குட்டி எலிக்காக பாம்பை பந்தாடிய தாய் எலி: வைரல் வீடியோ

இந்த வீடியோவில், ஒரு கோழி தனது முட்டைகளை காப்பாற்ற ஒரு பயங்கரமான பாம்புடன் (Snake Video) சண்டையிடுவதைக் காண முடிகின்றது. கோழி பாம்பை எதிர்கொள்ள ஒரு கணம் கூட யோசிக்கவில்லை, அச்சப்படவில்லை. பாம்பு முட்டையை எடுக்க தனது பெரிய வாயைத் திறந்தவுடன், கோழி இந்த பாம்பை குத்துகிறது. 

சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள இந்த வீடியோவில், கோழி தனது முட்டைகளின் மேல் அமர்ந்து அவற்றைப் பாதுகாப்பதைக் காண முடிகிறது. அப்போது அதற்கு முன்னால் ஒரு பெரிய பாம்பு அதன் வாயைத் திறந்தபடி இருக்கிறது. பாம்பு எளிதாக முட்டையை எடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளது. ஆனால், கோழியும் முழு உறுதியுடன் இருக்கிறது. பாம்பை எதிர்கொள்ள கோழி தயாராக உள்ளது. 

பாம்பு முட்டையை எடுக்க வரும்போதெல்லாம், கோழி முழு வேகத்துடன் அதை தாக்குகிறது. 

அந்த ஆச்சரியமான வீடியோவை இங்கே காணலாம்:

என்ன நடந்தாலும், தன் முட்டைகளை காப்பாற்ற வேண்டும் என்ற முடிவை கோழி எடுத்துவிட்டது. தன் உறுதியால், இறுதியாக பாம்பை விரட்டி விடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது. அனைவரும் இந்த கோழியின் தாயன்பையும் தைரியத்தையும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

ALSO READ | மனிதனை அரவணைக்கும் குரங்கு!  வைரலாகும் பாசபின்னைப்பு வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News