வைரலாகும் ஹிலாரி கிளிண்டன் டேட்டோ - நீங்க பாக்கலையா?

அதிபர் தேர்தலில் தோல்வியுற்றாலும் மக்கள் மனதினை அவர் வென்றுள்ளார் ஹிலாரி கிளிண்டன்!

Last Updated : Dec 18, 2017, 04:18 PM IST
வைரலாகும் ஹிலாரி கிளிண்டன் டேட்டோ - நீங்க பாக்கலையா? title=

அமெரிக்க அதிபர் தேர்தலில் நின்று தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டனின் புகைப்படத்தை, அமெரிக்க நடிகர் பீட் டேவிட்சன், தனது கையில் பச்சைகுத்தி அணைவரது கவணத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகர் பீட் டேவிட்சன். இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில், அமெரிக்க அதிபர் தேர்தலில் நின்ற ஹிலாரி கிளிண்டனின் புகைப்படத்தை தன்கையில் பச்சைகுத்தி அந்த படத்தினை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த படத்துடன் ஹிலாரி கிளிண்டனுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தினையும் பகிர்ந்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது பரவலாக அணைவராலும் பேசப்பட்டு வருகின்றது. இதனால் இணையத்தில் வைரலாக இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது.

அதிபர் தேர்தலில் தோல்வியுற்றாலும் மக்கள் மனதினை அவர் வென்றுள்ளார் என்பதற்கு இது ஒரு சான்றாகும். அரசியலைத் தாண்டி மக்களின் மனதில் ஹிலாரி நிலையான இடத்தை பெற்றுள்ளார் என்பதை மறுக்க முடியாது!

Trending News