இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டருக்கான முதல் தேர்வில் இருப்பவர் ஹார்டிக் பாண்டியா. இவர் தற்போது லண்டனில் கடுமையான அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு, வெற்றிகரமாக மீண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
இதுகுறித்து ஹார்டிக் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிடுகையில்., “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. உங்கள் அனைவரது பிராத்தனைக்கும் மிக்க நன்றி. எந்த நேரத்திலும் திரும்பி வருவேன்! அதுவரை என்னை மிஸ் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பிசிசிஐ, விரைவில் குனம் அடைந்து திரும்புமாறு குறிப்பிட்டுள்ளது.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சைக்கு லண்டன் சென்ற ஹார்டிக் பாண்டியா அடுத்த ஐந்து மாதங்களுக்கு, பிசிசிஐ நடவடிக்கைகளல் இருந்து ஒதுங்கி இருப்பார் என கூறப்படுகிறது.
Wishing you a speedy recove https://t.co/qfeWK2NjVQ
— BCCI (@BCCI) October 5, 2019
இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்குப் பிறகு பரோடா ஆல்-ரவுண்டர் இரண்டாவது முக்கிய உறுப்பினராக உள்ளார். அவர் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும் எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் விலகி இருப்பார் என கூறப்படுகிறது.
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதற்கு முன்பு ஹார்டிக் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார்.
முன்னதாக கடந்த செப்டம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசிய கோப்பையின் போது ஹார்டிக் முதன்முதலில் காயம் அடைந்தார். காயத்திற்கான சிகிச்சை பெற்று மீண்டும் அவர் ஐ.பி.எல் மற்றும் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான நேரத்தில் அணிக்கு பூரன நலத்துடன் அணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.