இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதால் குவாஹாத்தி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தாலும், கிரிக்கெட்டில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நம் கிரிக்கெட் வீரர்கள் மறக்கவில்லை.
கிரிக்கெட் வீரர்கள் என்றால் களத்திற்கு தயாரான வீரர்கள் இல்லை, போட்டியின் அறிவிப்பு பணியில் ஈடுப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள். ஆம்., போட்டி இன்றி ஏமாற்றத்தில் ஆழ்ந்த ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் மைதானத்தில் நடனம் ஆடினர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒதுக்கப்பட்ட நேரத்தில் மைதான ஊழியர்கள் ஆடுகளத்தை உலர்த்தத் தவறிய நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் பார்சபரா ஸ்டேடியத்தில் கடைசி வரை தங்கியிருந்தனர், போட்டி தொடங்கும் என்ற நம்பிக்கையில். இதனிடையே ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, இந்தியா ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், இர்பான் பதானுடன் களத்தில் இறங்கினார்.
இரண்டு கிரிக்கெட் வீரர்களும் களத்தில் நடனமாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இந்த வீடியோவினை தற்போது ஹர்பஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"விளையாட்டு இல்லாத போதிலும் நேற்று இரவு குவாஹாட்டி கூட்டத்திற்கு 10/10 எண்கள்" என்று ஹர்பஜன் இந்த வீடியோவிற்கு தலைப்பிட்டார். வீடியோவில், கூட்டம் அவரை உற்சாகப்படுத்தத் தொடங்கியபோது ஹர்பஜன் உலா வருவதைக் காண நம்மாள் காணமுடிகிறது.
பிரபலமான பஞ்சாபி பாடலான “தெனு சூட் சூட் கர் டா” என்னும் பாடலை DJ இசைக்க, பாட்டிற்கு பந்து வீச்சாளர்கள் நடனமாடினார். இரண்டு கிரிக்கெட் வீரர்கள் சிரித்துக் கொண்டே நடந்து செல்வதற்கு முன்பு இர்பானும் சில நகர்வுகளைக் காட்டினார்.
இணையத்தை களக்கி வரும் இந்த வீடியோ பதிவு தற்போது உங்கள் பார்வைக்கு...