’பிறவி அதிசயம்’ மூன்று ராட்சத கொம்புகளை கொண்ட கிடா - வைரல் வீடியோ

பிறவி அதிசயம்போல் ஆடு ஒன்று மூன்று ராட்சத கொம்புகளை கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் முதன்முறையாக 3 கொம்புகளை கொண்ட ஆட்டை பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 18, 2023, 02:33 PM IST
  • 3 கொம்புகளை கொண்ட ராட்சத ஆடு
  • இதுவரை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை
  • டிவிட்டரில் வைரலான வீடியோ
’பிறவி அதிசயம்’ மூன்று ராட்சத கொம்புகளை கொண்ட கிடா - வைரல் வீடியோ title=

உலகில் ஏதாவதொரு மூலையில் மனிதர்கள் வியக்கும் வகையிலான அதிசயங்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. ஒன்றைபோல் மற்றொன்று இல்லாமல், படைப்பில் வியப்புக்குரியதாக இருந்தால் அதனை அதிசயம் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. அப்படி, இரண்டு கொம்புகளுடன் உலகம் முழுவதும் ஆட்டை பார்த்த பலருக்கும், 3 கொம்புகளைக் கொண்ட ராட்ச கிடாவை பார்க்கும்போது வியப்பு ஏற்படுவது வாடிக்கை தான். என்னது 3 ராட்சத கொம்புகளை கொண்ட ஆடா என்று கேட்கலாம். வீடியோவை பார்க்கும் முன்பு பலரும் இப்படியொரு கிடா இருப்பதாக நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். 

மேலும் படிக்க | Viral Video: வியக்க வைக்கும் ‘சூப்பர் ஸ்டார் கழுகு’... நீரில் மீன் வேட்டை... நடுவானில் மீன் விருந்து..!!

ஆனால் வீடியோவுக்குப் பிறகு எல்லோரும் நம்பியிருக்கிறார்கள். வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் ராட்சத வெள்ளை கிடா ஒன்று இருக்கிறது. அதற்கு மூன்று மிகப்பெரிய கொம்புகள் இருக்கின்றன. பார்ப்பதற்கே அச்சுறுத்தும் வகையில் இருக்கும் அந்த கிடா, அதிசயமாக படைக்கப்பட்டிருக்கிறதோ என எண்ணுகின்றனர். உலகம் முழுவதும் இருக்கும் ஆட்டு இனங்களில் ராட்சத கிடா இருக்கும் ஆடு இனங்கள் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இந்த கிடாவும். ஆனால் அந்த கிடாக்களுக்கு எல்லாம் 3 கொம்புகள் எல்லாம் இல்லை. இந்த வீடியோவில் இருக்கும் கிடாவுக்கு தான் 3 கொம்புகள் அதிசயமாக இருக்கிறது. இது படைப்பின் அதிசயம் தான் என அடித்துச் சொல்லாம்.

@TheFigen_ என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது. சுமார் 12.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த வீடியோவை டிவிட்டரில் மட்டும் பார்த்து ரசித்துள்ளனர். கடவுளின் படைப்பில் மறைத்துவைக்கப்பட்ட ரகசியம் இந்த ஆடு தான் என்றெல்லாம் சிலர் கமெண்ட் அடித்துள்ளனர். இன்னும் சிலர் கிடாவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது என்றும், சிலர் வியப்பின் உச்சத்திலும் கிடா இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | ’நல்லி எழும்பா இருந்தா நல்லா இருந்திருக்கும்’ எலும்பை ரசித்து சுவைத்து சாப்பிடும் ஒட்டகச் சிவிங்கி - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News