ஆண், பெண் இருபாலாருக்கும் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் அலாதி பிரியம் உண்டு. அந்த அழகை மெருகேற்ற பயன்படுவது மேக்கப் தான். மேக்கப் என்றல் யாருக்கு தான் பிடிக்காது, மேக்கப் போடாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. தற்போது ஆண், பெண் இருபாலருக்கும் என்று தனித்தனியே அழகு நிலையங்கள் பெருகிவிட்டன. பல மேக்கப் ஆர்டிஸ்டுகள் தங்களது திறமைகளை நாளுக்கு நாள் மெருகேற்றி புதுவிதமான மேக்கப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அதில் தற்போது மக்களால் அதிகம் ரசிக்கப்படுவது, மேக்கப் மூலம் ஒருவரை மற்றொருவர் போல் மாற்றும் செயல்முறை தான். அந்த வகையில் தீக்ஷிதா என்ற பெண் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் தனது திறமையான மேக்கப் மூலம் நடிகர் ஷாருக்கான் போல மாறிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார், அது தற்போது இணையத்தில் பெரும்பாலானோரை கவர்ந்து தீயாக பரவி வருகிறது.
அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில், தீக்ஷிதா, பேக்ரவுண்டில் ஷாருக்கான் நடித்த RA.1 படத்தில் வரும் 'சம்மக் சல்லோ' பாடலுடன் தனது மேக்கப் ட்ரான்ஸ்ஃபர்மேஷனை ஆரம்பிக்கிறார். மேக்கப் போடுவதற்கு அடித்தளமான மாய்ஸ்ச்சரைசர்(moisturiser), பவுண்டேஷன்(foundation), ஐ ஷேடோ(eyeshadow) போன்றவற்றை பயன்படுத்துகிறார். பின்னர் முகத்திற்கு காண்டூர்(contour) செய்து முழுமையாக நடிகர் ஷாருக்கான் போல மாறி தோற்றமளிக்கிறார். மேலும் அந்த வீடியோவில் ஷாரூக்கானையும் டேக் செய்து பாலிவுட்டின் கிங்கான ஷாருக்கானின் மேக்கப் ட்ரான்ஸபர்மேஷன் விடீயோ 1 லட்சம் லைக்குகளை பெறுமா ? இந்த மேக்கப் வீடியோவை நீங்கள் என்ஜாய் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
ALSO READ | வானத்தில் பருந்து பறக்கும்... ஆனால் மீன் பறக்குமா? வானில் மீன்! Viral Video
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR