குத்தாட்டம் போட்ட ஸ்பைடர்மேன், வாய் பிளந்த மக்கள்: பரபரப்பை கிளப்பிய வைரல் வீடியொ

Funny Viral Video: ஸ்பைடர்மேன் குத்தாட்டம் போட்டு பார்த்துள்ளீர்களா?  மேற்கு வங்காளத்தில் நடந்த ஒரு சந்தையில் ஸ்பைடர் மேன் உடையில் நடனமாடும் ஒருவரின் வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 12, 2022, 01:42 PM IST
  • சந்தையில் டான்ஸ் ஆடி கலக்கிய ஸ்பைடர்மேன்.
  • ‘யாருப்பா நீ’ என வியந்த மக்கள்.
  • வைரலான வீடியோ.
குத்தாட்டம் போட்ட ஸ்பைடர்மேன், வாய் பிளந்த மக்கள்: பரபரப்பை கிளப்பிய வைரல் வீடியொ title=

வைரல் வீடியோ: சந்தையில் ஸ்பைடர் மேன் ஆடும் குத்தாட்டம்!! மேற்கு வங்காளத்தில் நடந்த ஒரு சந்தையில் ஸ்பைடர் மேன் உடையில் நடனமாடும் ஒருவரின் வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்டர் ஸ்பைடர் என்று அழைக்கப்படும் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரால் இந்த கிளிப் வெளியிடப்பட்டது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவர், மார்வெல் கேரக்டரில் மற்ற உள்ளூர் பெண்களுடன் நாட்டுப்புற இசைக்கு நடனமாடுவதை வீடியோவில் காண முடிகின்றது. 

இந்த போஸ்டின் தலைப்பின் படி, இந்த வீடியோ சாந்திநிகேதனில் உள்ள சோஞ்சூரியில் உள்ள சந்தையில் பதிவு செய்யப்பட்டது. இன்ஸ்டாகிராம் இடுகையின் தலைப்பில், '@mrspider2014 சோனாஜூரியில் எஞ்சாய் செய்கிறார், நடனமாடி அசத்தி வருகிறார்’ என எழுதப்பட்டுள்ளது. 

ஸ்பைடர்மேனின் வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பியது

சமூக ஊடகங்கலில் இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, இதுவரை 44,000 வியூஸ்களையும் 4,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவில் ஸ்பைடர்மேன் போல் உடையணிந்து மக்களுடன் ஒருவர் வேடிக்கையாக நடனமாடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி சிந்திக்க வைத்துள்ளது. 

மேலும் படிக்க | 80 வயசு தாத்தா, 25 வயசு குமரி; இவங்க செய்யுற செயலா இது: வீடியோ வைரல் 

ஸ்பைடர்மேனின் இந்த நடனத்தை அங்கு நடனமாடிய மற்றவர்களும், அங்கு இருந்தவர்களும் வெகுவாக ரசித்தனர். ஸ்பைடர்மேன் உடை அணிந்த நபர் அனைவருடனும் இணைந்து மிக பக்காவாக நடனமாடுகிறார். ஸ்பைடர்மேன் மார்வெல்ஸின் மிகவும் பழைய கதாபாத்திரம் ஆகும். உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த பாத்திரத்தை நன்கு அறிவார்கள். 

இந்த வீடியோவுக்கு பல இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். ‘மேட் மை டே’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் கேப்டன் ஜாக் ஸ்பாரோவின் உடையை அணிந்த ஒருவரின் வீடியோவும் வைரல் ஆனது. 

இது போன்ற ஒரு வீடியோ ஏற்கனவே வைரலாகியுள்ளது

முன்னர் வைரல் ஆன வீடியோவில், அந்த நபர் ஜானி டெப்பின் ('பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' கதாபாத்திரத்தில் நடித்தவர்) பழக்கவழக்கங்களை முழுமையாக பின்பற்றி பணம் கேட்பதை கிளிப் காட்டியது. தோற்றத்தை பூர்த்தி செய்ய அவர் ஒரு பொம்மை துப்பாக்கியையும் வைத்துக்கொண்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் டெப் தனது முன்னாள் மனைவி அம்பர் ஹியர்டுக்கு எதிராக சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டபோது இந்த வீடியோ வெளிவந்தது. 

ஜானி டெப் வேடத்தில் வைரல் ஆனவர் உண்மையில் மற்றவர்களிடம்  யாசகம் கேட்கும் ஒரு பிச்சைக்காரர். அவருக்கு அதிக கடன் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. அவரது நடிப்பை கண்டு இணையப் பயனர்கள்  அவரை "ஜானி டெப்ட்" என்று கேலியாக அழைத்தனர். இந்த கிளிப் பல சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டது மற்றும் ட்விட்டரில் கிட்டத்தட்ட 8 மில்லியன் வியூஸ்களைப் பெற்றது.

தற்போது வெளிவந்துள்ள ஸ்பைடர்மேன் வீடியோவும் வேடிக்கையாக இருக்கிறது. ஸ்பைடர்மேன் மக்களுக்கு இடையில் வந்து பக்காவாக நடனமாடுவது காண்பதற்கு வேடிக்கையாக உள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களின் வேகமாக வைரல் ஆகி வருகின்றது. 

மேலும் படிக்க | 'வேணாம்..விட்டுடு..': வடிவேலு ஸ்டைலில் கெஞ்சிய சிங்கம், வெச்சி செஞ்ச எருமை, வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News