Covid Vaccine: கொரோனா ஊசி போட்டுக் கொள்ள மறுத்து சாமியாடி சாதித்த பாட்டி

கொரோனா ஊசியா தாங்காது என கையெடுத்து கும்பிடும் வயதான தம்பதியினர் செய்த சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 2, 2021, 02:49 PM IST
  • கொரோனா ஊசி போட்டுக் கொள்ள அச்சம்
  • சாமியாடி சாதித்த பாட்டி
  • இது புதுச்சேரியின் சாமி பாட்டி
Covid Vaccine: கொரோனா ஊசி போட்டுக் கொள்ள மறுத்து சாமியாடி சாதித்த பாட்டி title=

புதுச்சேரி: 100 சதவீத கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது புதுச்சேரி அரசு.  தடுப்பூசி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கே சென்று சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

கொரோனா ஊசியா தாங்காது என கையெடுத்து கும்பிடும் வயதான தம்பதியினர் செய்த சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேட்டுப்பாளையம்,  தன்வந்தி நகர் பகுதியில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அங்கு வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி, தடுப்பூசி போடுவதற்கு ஊக்கமளித்தனர்.

அப்போது, அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வரும் வயதான தம்பதியினரிடம் சுகாதாரத் துறை ஊழியராக பணியாற்றும் வேல்விழி என்னும் பெண், தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கூறினார். அதற்கு அந்த பாட்டி செய்யும் அலப்பறை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 

அப்போது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அச்சப்பட்ட அந்த வயதான தம்பதியினர் கொரோனா ஊசி (Corona Vaccine) போட்டுக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடித்தனர். சுகாதார ஊழியர் வற்புறுத்தியதால், அந்த பாட்டி, சாமி வந்தது போல் ஆடினார். அதைப் பார்த்து ஆடிப்போன சுகாதார ஊழியர் என்ன செய்வது என்று திகைத்துப் போய் நின்றார். 

புதுச்சேரி முதலமைச்சரின் பெயரைச் சொல்லி, ரங்கசாமிக்கு தெரியும் என்று கூறி சாமியாடிய பெண்ணை மேலும் சமாளிக்க முடியாது என்று நினைத்து சுகாதார  ஊழியர்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறினார்கள். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும், பலரும் பலவிதமாக பதிலிட்டு நையாண்டி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் மகளாக கேட்டுக் கொள்கிறேன் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார். சேலத்தில் நடைபெற்ற அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பி துரை மகள் திருமணத்தில் கலந்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களை தமிழிசை சவுந்தர்ராஜன் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், புதிய வகை ஒமைக்ரான் கொரோனா தொற்றில் (Omicron Varrient) இருந்து காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசி போட்டு கொள்வது மிக அவசியம் என்றும், முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியைப் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசியே போடாதவர்கள் உடனடியாக முதல் தவணை தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Also Read | 11 திருமணங்களுக்குப் பிறகு மீண்டும் கல்யாணத்துக்கு தயாராகும் 52 வயது பெண்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News