’வடை திருடும்போதே கைது பண்ணியிருக்கனும்’ முட்டை திருடும் காக்காவின் வைரல் வீடியோ

வடை திருடும்போது கைது பண்ணாமல் விட்டதால், கடை ஒன்றில் தைரியமாக காக்கா முட்டை திருடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 26, 2022, 11:38 AM IST
  • முட்டை திருடும் காகம்
  • இணையத்தில் வீடியோ வைரல்
’வடை திருடும்போதே கைது பண்ணியிருக்கனும்’ முட்டை திருடும் காக்காவின் வைரல் வீடியோ title=

காலங்காலமாக இன்றும் குழந்தைகளின் பேவரைட் கதையாக இருப்பது காக்கா வடை திருடும் கதைதான். இந்த கதையை வைத்தே பல குழந்தைகளை உறங்க வைப்பது, வேடிக்கை காட்டுவதும் பெற்றோரின் பொழுதுபோக்காக உள்ளது. இந்த கதையில் இருக்கும் ஹைலைட் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியதாகவும், குழந்தைகளை மகிழ்விப்பதுமாக இருப்பதும் தான். 

மேலும் படிக்க | பாக்சிங்கில் பதறவைக்கும் ஆப்பிரிக்க சிறுவன் - வைரல் வீடியோ

சிறந்த கதை சொல்லியாக இருந்தால், குழந்தைகளின் சுவாரஸ்யத்தைக் கூட்டும் வகையில் சில ஜாடைகளை சேர்த்து இந்தக் கதையை அவர்களின் பேவரைட்டாக சொல்லிவிடலாம். தந்திரமாக பாட்டியிடம் வடையை திருடும் காக்கா, நரியிடம் ஏமாறுவது மற்றொரு கதை. இதனால், கடும் பசியில் இருக்கும் காக்கா, நரிபோல் யோசித்து பானையில் கீழே இருக்கும் தண்ணீரை கற்களை போட்டு குடிப்பது இந்தக் கதையின் தொடர்ச்சி. இப்படியாக அடுத்தடுத்த கதைகள் காக்காவை மையப்படுத்தி இருக்கும். இந்தக் கதைகளை வரிசையாக கூறும்போது பெரியவர்களுக்குகூட புதியதாக தோன்றும்.

கதை ஒன்று தானே தவிர, சொல்லும் விதத்தில் தான் அதன் சுவாரஸ்யம் கூடுவதும் குறைவதும் இருக்கும். இந்தக் கதையை எப்போதும் கதையாக மட்டுமே கேட்டவர்களுக்கு, இப்போது ஆதாரத்துடன் கதை சொல்வதற்கு வீடியோ கிடைத்துள்ளது. ஆனால், வீடியோவில் வடைக்கு பதில் முட்டையை திருடுகிறது காக்கா. அந்த வீடியோவில் கடை ஒன்றிக்கு வரும் காக்கா சரியாக முட்டை பாக்ஸ் வைத்திருக்கும் இடத்துக்கு செல்கிறது. முட்டை மேல் இருக்கும் அட்டையை தள்ளிவிட்டுவிட்டு முட்டையை மட்டும் திருடிச் செல்கிறது.

மேலும் படிக்க | கிரிக்கெட் பேட்டால் கணவனை வெளுத்து வாங்கிய மனைவி; அதிர்ச்சி தரும் CCTV காட்சிகள்

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவை பார்த்து ரசிக்கும் நெட்டிசன்கள், ‘வடையை சுடும்போதே கைது பண்ணியிருக்கனும், அப்போது விட்டதால் இப்போது முட்டையில் வந்து நிற்கிறது’ என கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News