இசை எனும் இன்ப வெள்ளத்தை ரசிக்க ஓடோடி வந்த மான் - வைரல் வீடியோ

இளம் பெண் வாசிக்கும் இசையெனும் இன்ப வெள்ளத்தை ரசிக்க மான் ஒன்று ஓடோடி வந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 22, 2023, 02:36 PM IST
  • இசை கேட்க ஓடி வந்த மான்
  • ஆச்சரியமடைந்த பெண்
  • இணையத்தில் வீடியோ வைரல்
இசை எனும் இன்ப வெள்ளத்தை ரசிக்க ஓடோடி வந்த மான் - வைரல் வீடியோ title=

காற்று இருக்கும் இடமெல்லாம் இசை இருக்கும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையும் இசையும் கூடவே பயணிக்கும். அதனை அறிந்து அதனூடாக பயணிப்பவர்கள் பாக்கியசாலிகள். ஏனென்றால், யாருமில்லா காட்டிற்கு இருந்தால் குருவியின் குரல் இசையாக கேட்கும். அமைதியான அந்த இடத்தில் காற்று செல்லும் ஓசையை கேட்க முடியும். ஆக்ரோஷமான நேரங்களில் காற்றின் அவசரத்தையும் செவியின் ஊடாக கேட்கலாம். இப்படி பல பரிணாமங்களில் இருக்கும் இசை ஒலியாக, பாடலின் மெட்டாக கேட்டுக்கும்போது, இதயத்தை உருக வைக்கும். 

மேலும் படிக்க | கெத்தப் பாத்தீங்களா.. பானிபூரி சாப்பிடும் குரங்கின் ஸ்டைலான வைரல் வீடியோ

இசையென்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல அனைத்து உயிர்களுமே இசையை ரசிக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக அவ்வப்போது பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். அப்படி ஒரு இசை ரசிக்கும் மானின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பெண் ஒருவர் யாழ் இசையை வாசிக்க, அதனை எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்த மான் திடீரென அந்தப் பெண் வாசிக்கும் இடத்துக்கே தேடி ஓடிவந்து அமைதியாக நின்று கேட்கிறது. இதனை பார்க்கும்போது இசையின் அற்புதத்தை உணரமுடியும். அந்தப் பெண்ணுக்கும் கூட மான் ஓடி வந்து தன்னுடைய இசையை கேட்கிறதே என எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். 

இது குறித்து அவர் எழுதும்போது,  ''என்னுடைய யாழ் வகுப்பு டிஸ்னி படமாக மாறிவிட்டது'' என்று எழுதி, அந்த வீடியோவை  பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மரங்கள் நிறைந்த ரம்யமான வனப்பகுதியில் யாழ் வாசித்துக் கொண்டு இருக்கிறார் அந்த பெண். யாழ் இசையைக் கேட்டு மான் அவரை நெருங்குகிறது. இசை தொடரவே அந்த மான் நெருங்கி நெருங்கி வந்து அந்த இசையை கேட்டு ரசிக்கிறது. இசை முடிந்ததும் அந்த மான் துள்ளிக்குதித்து ஓடுகிறது. அந்த மானைக் கவனிக்காத அந்த பெண் கடைசியில் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பலரும் அந்த வீடியோ குறித்து பதிவிட்டு வருகின்றனர். இசையை உணரத்தெரிந்த மான் என்றும், மிகவும் அழகான நிகழ்வு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | டிவியில் ஓடும் கால்பந்தாட்டத்தை நிறுத்த படாதபாடுபட்ட பூனை: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News