சாலையில் சண்டை போடும் ராஜ நாகங்களின் வீடியோ வைரல்! வொய் திஸ் கொலைவெறி?

King Cobras Fighting: மனதை கலங்கடிக்கும் நாகப்பாம்புகளின் சண்டையால் அதிர்ந்து உறைந்த மக்கள்... சாலையில் சண்டை போடும் ராஜ நாகங்களின் வைரல் வீடியோ இது... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 2, 2022, 08:08 AM IST
  • சீறும் சர்ப்பங்களின் வைரல் வீடியோ
  • நாகப்பாம்புகளின் மூர்க்கமான சண்டையால் அதிரும் சாலை
  • சாலைக்கு வந்து உடும்புப்பிடி சண்டை போடும் ராஜ நாகங்கள்
சாலையில் சண்டை போடும் ராஜ நாகங்களின் வீடியோ வைரல்! வொய் திஸ் கொலைவெறி? title=

நாகப் பாம்புகளின் வைரல் வீடியோ: இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சிரிக்க வைப்பதுடன் சில சமயம் சிந்திக்க வைக்கின்றன. பல சமயங்களில் ஆச்சரியப்பட வைத்தால், அதிர்ச்சியில் ஆழ்த்துகின்ற வீடியோக்களும் அதிகம் பார்க்கப்படுகின்றன. சில சமயம் சோகத்தையும் ஏற்படுத்தும் விதவிதமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின்றன. அதிலும், பாம்புகளின் வீடியோகளை பார்ப்பதற்காக அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பாம்புகளின் காதலை பார்த்திருக்கலாம், மோதலைப் பார்த்திருக்கலாம். ஆனால் சாலைக்கு வந்து பட்டவர்த்தனமாக மோதி, பார்ப்பவர்களை பயப்படச் செய்யும் நாகப்பாம்புகளின் இப்படிப்பட்ட உக்ரமான சண்டையை பார்த்திருக்க முடியாது. 

நம்மால் கற்பனை செய்ய முடியாத அனைத்து விஷயங்களை பார்ப்பவர்கள், அவற்றை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் பதிவு செய்து அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்கின்றனர். அப்படி பகிரப்பட்ட ஒரு வீடியோ காண்பதற்கு மிக அரிதானதாக இருக்கிறது. அந்த வீடியோ யூடியூபில் பகிரப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | சர்ப்ப தோஷத்தைப் போக்கும் நாக பஞ்சமி இன்று

இது பாம்புகளின் மோதல் வீடியோ! பாம்புகளின் பட்டவர்த்தமான சண்டை வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. பல மில்லியன்கணக்கான லைக்குகளையும் பெற்று டிரெண்டிங்கில் இருக்கும் வீடியோவாக மாறிவிட்டது இந்த சூப்பர் டூப்பர் சண்டை வீடியோ.

பார்ப்பவர்களை நடுங்க வைக்கும். இந்த வீடியோவில், இரண்டு ராஜ நாகப்பாம்புகள் ஒன்றையொன்று கொல்லும் கொலைவெறியில் சண்டை போடுகின்றன.  

இந்த வீடியோவில் இரண்டு ராஜ நாகப்பாம்புகள் நடுரோட்டில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். ஆனால் இந்த பிணைப்பு காதலுக்கானது இல்லை என்பது பார்த்தாலே தெரிகிறது. இரண்டுமே பின்வாங்கத் தயாராக இல்லை.

மேலும் படிக்க | ‘இவ்ளோ பெருசா இருந்தா எப்படி?’

வாழ்வா சாவா என்ற இந்த மோதல் போரில் யார் வெல்வார்கள், யார் வீழ்வார்கள் என்று கண்டுபிடிப்பது கடினம். இந்த வைரல் வீடியோவை பார்த்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

நீயா நானா? உயிர் பிழைப்பது யார்?

இந்த வீடியோ சமூக ஊடக தளமான யூடியூப்பில் பகிரப்பட்டுள்ளது. இந்த காணொளியில் இந்த பாம்புகளின் சண்டையை பார்த்தால் பகீரென்று இருக்கிறது. இந்த காணொளியை பார்த்த பலரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். காணொளியின் முடிவில் ஒரு பாம்பு மற்றொரு பாம்பின் பிடியில் இருந்து விடுபட்டு ஓடுகிறது.

வீடியோ வைரலானது

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சிலர் தங்கள் பயத்தை கமெண்டில் குறிப்பிட்டுள்ளனர், சிலர் இந்த சண்டையை மிகப்பெரியது என்று அழைத்தனர். கருத்துப் பிரிவில், பலரும் பலவிதமான எதிர்வினைகளை வழங்குவதைக் காண முடிந்தது.

மேலும் படிக்க | Viral Video: சின்ன விசியத்துக்காக கட்டுன புருஷனை இப்படி அடிப்பது.. பாவம் 15 தையல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News