மலைப்பாம்புடன் ஒன் டூ ஒன் போட்ட உடும்பு... யார் பெரிய ஆளுனு அடிச்சு காட்டு!

Python Komodo Dragon Viral Video: வலிமையான ஊர்வனங்களான மலைப்பாம்பும், உடும்பும் தங்களை உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சண்டையிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 29, 2023, 10:23 AM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் கடந்த 12 ஆம் தேதி பதிவிடப்பட்டது.
  • தற்போது 6.5 லட்சம் வீயூஸை தாண்டியுள்ளது.
மலைப்பாம்புடன் ஒன் டூ ஒன் போட்ட உடும்பு... யார் பெரிய ஆளுனு அடிச்சு காட்டு! title=

Python Komodo Dragon Viral Video: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான மற்றும் வினோதமான விஷயங்களால் நிரம்பியிருக்கிறது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்க முடியும். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில நேரம் புன்னகைக்க வைக்கின்றன, சில நேரம் யோசிக்க வைக்கின்றன, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில நேரம்அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில நேரம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. 

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பெரிய மலைப்பாம்புக்கும் உடும்புக்கும் இடையே நடக்கும் சண்டை நடக்கிறது. இந்த சண்டையுடன் தொடர்புடைய ஆச்சரியத்தையும் பதபதைப்பையும் உண்டாகுகின்றன. 

மேலும் படிக்க | Viral Video: நீயா... நானா... ஒரு கை பார்த்துடுவோம்! சண்டையில் இறங்கிய யானைகள்!

இந்த வைரல் வீடியோ மலைப்பாம்புக்கும், உடும்புக்கும் இடையே நடக்கும் சண்டையை காட்டுகிறது. உடும்பு, மலைப்பாம்புக்கு மேல் விளிம்பில் இருப்பதையும் அதன் கழுத்தை கடுமையாக கடித்ததையும் வீடியோ காட்டுகிறது. மலைப்பாம்பைப் பார்த்தால், அது முற்றிலும் சரணடைந்தது போல் தெரிகிறது.

வைரல் வீடியோ: 

இது உலகின் மிக சக்திவாய்ந்த மற்றும் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு ஊர்வனவற்றுக்கு இடையே மிகவும் ஆபத்தான மற்றும் இரத்தக்களரியான சண்டையாக இருந்தது. மேலும் இரண்டு உயிரினங்களும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒன்றோடு ஒன்று போரிட்டது. இந்த வீடியோவின் முடிவுவரை, உடும்பு தனது பிடியை விடாமல் மலைப்பாம்பின் மீது முழு ஆதிக்கத்தையும் செலுத்தியது. 

பலரும் இந்த வீடியோவை பார்த்து தங்களின் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். பலரும் உடும்புதான் கடைசியில் வெற்றி பெற்றிருக்கும் என ஆரூடம் கூறுகின்றனர். மேலும், சிலரோ அந்த மலைபாம்புக்கு அஞ்சலி குறிப்பு தெரிவிக்கின்றனர். மேலும், ஒருவர்,"இவை அனைத்தும் திட்டமிடப்பட்டவை. பாவம் அந்த விலங்குகள்" என பதிவிட்டுள்ளார். 

மேலும் ஒரு சிலரோ இந்த இரண்டு விலங்குகள் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்றும் கருத்து தெரிவித்துவருகின்றனர். உடும்பு மலைப்பாம்பை மோசமாக தாக்கியிருந்தாலும், பாம்பு அதன் விஷயத்தை கக்குவதற்கு வாய்ப்புள்ளது எனவும் அதனால் உடும்பும் உயிரிழக்க அதிக வாய்ப்பிருப்பதையும் தெரிவிக்கின்றனர். 

இந்த வீடியோ கடந்த மார்ச் 12 இன்ஸ்டாகிராமின் Big Cats India என்ற பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோ குறித்த தகவல்கள் ஏதுமின்றி,"உயிரிபிழைத்திருப்பதற்கான போர்" என குறிப்பிட்டுள்ளது. தற்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும், 6.5 லட்சம் வியூஸ்களை இந்த வீடியோ தாண்டியுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: சூரிய நமஸ்காரம் செய்யும் சிறுத்தை! இணைவாசிகளை கவர்ந்த வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News