குட்டி யானைகள் செய்பவை அனைத்துமே ரசிக்கத்தகுந்தவை தான். பிறந்த முதல் சில நாட்களில், அவர்களின் கண்பார்வை, ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலை ஆகியவை குறைவாகவே இருக்கும். மேலும் முதலிலவை பெரும்பாலும் தங்கள் தாய்மார்களை சார்ந்து இருக்கின்றன. அதனால் தான் தாய் யானைகள் ஆரம்ப கட்டங்களில் குட்டிகளை மிகவும் பாதுகாக்கின்றன. அவற்றிற்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றன. தாய் யானைகள் தங்கள் குட்டிகள் எல்லா விதமான சவால்களையும் சமாளிக்கவும் கற்றுக்கொடுக்கின்றன. இதை நிரூபிக்கும் வகையில், தாய் யானை தனது குட்டிக்கு சரிவான பாதையில் எப்படி இறங்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் பழைய வீடியோ ட்விட்டரில் மீண்டும் வெளிவந்து 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த அழகான தருணத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள Buitengebieden என்ற டிவிட்டர் கணக்கில், வேடிக்கையான மற்றும் அழகான விலங்கு வீடியோக்களை தவறாமல் பதிவிடுவதைக் காணலாம். இந்த வீடியோ "அம்மா: இது எப்படி கீழே இறங்குவது என்பதை நான் கடைசியாக உனக்குக் காட்டுகிறேன்" என்ற தலைப்புடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அடர்ந்த காட்டில் ஒளிந்திருக்கும் தவளை; 10 நொடியில் கண்டுபிடித்தால் கில்லாடி தான்!
வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:
Mother: This is the last time I show you how to go down..
Son:#BestOfBuitengebieden pic.twitter.com/KJFaqJXq8M
— Buitengebieden (@buitengebieden) December 31, 2022
அந்த வீடியோவில், தாய் யானை தனது குட்டிக்கு சேறு நிறைந்த சரிவில் இறங்குவது எப்படி என்று கற்றுக்கொடுக்க முயல்கிறது. குட்டி யானையை அறிவுறுத்துவதற்காக, முதலில் சரிவில் எப்படி இறங்க வேண்டும் என்பதை தாய் யானை செய்து காட்டுகிறது. இருப்பினும், கன்று அதனை மீண்டும் செய்ய முயற்சிக்கும் போது, அது தவறி கீழே உருண்டு விழுகிறது. 1.5 மில்லியன் பார்வைகளைத் தவிர, வீடியோ 29,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 3330 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது. இணைய பயனர்கள் அபிமான வீடியோவை விரும்பி பலவிதமான கருத்துக்களை பதிவு செய்தனர்.
மேலும் படிக்க | யாரோட ஆட்டம் சூப்பரா இருக்கு... பார்த்து சொல்லுங்க மக்களே! யானையின் க்யூட் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ