Viral Video: 'கற்பூர புத்திப்பா உனக்கு...' இந்த க்யூட் பூனையின் செயலை பாருங்களேன்!

Cat Viral Video: ஒரு பூனை அதன் வளர்ப்பவர் நாணயத்தை வைத்து செய்துகாட்டிய தந்திரத்தை முதல் தடவையே செய்துகாட்டி அசத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 26, 2023, 02:49 PM IST
  • இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.
  • ஜூலை 19இல் வெளியான இந்த வீடியோ 6.6 மில்லியன் வீயூஸை பெற்றுள்ளது.
  • இந்த வைரல் வீடியோவில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Viral Video: 'கற்பூர புத்திப்பா உனக்கு...' இந்த க்யூட் பூனையின் செயலை பாருங்களேன்! title=

Cat Viral Video: ஒட்டுமொத்த உலகத்தையும், குறிப்பாக மனித சிந்தனைகளை இணைப்பது எது என்றால் அது கண்டிப்பாக இணையமாகவே இருக்க முடியும். இணையம் தொழில்நுட்பம் என்றாலும், அன்பு ஒன்று தான் உலகை இணைக்கும் புள்ளி என்று சொன்னால் நிச்சயமாக மறுக்கமாட்டார்கள். ஏனென்றால் இணையம் இல்லாத இடத்தில் கூட உயிரினங்கள் இருக்கின்றன. அவை ஒன்றுக்கொன்று அன்பு செலுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. 

இப்படியான அன்பை பரிமாறிக் கொள்வதில் இருக்கும் சுகமே தனி. அதனை உணரும்போது உங்களுக்குள் இருக்கும் பரவசத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அப்படியான பரவசத்தை உணர வைக்கும் வகையிலான வீடியோக்கள் இப்போது இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை பார்த்தால் நீங்கள் எதை தேடுகிறீர்கள் எதனை தொலைத்தீர்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் எப்போதாவது ஒரு செல்லப் பூனையை வைத்திருந்தீர்களா அல்லது இப்போது பூனையை வளர்க்கிறீர்களா?. அப்படியானால், நீங்கள் எப்போதாவது அவர்களுக்கு ஒரு தந்திரத்தை கற்பிக்க முயற்சித்தீர்களா? நாய்கள் வளர்க்கப்படும் விதத்திலேயே பூனைகளுக்கு பயிற்சி அளிக்க முடியாது என்றாலும், அவற்றை 'உட்கார்', 'அங்கேயே இரு' மற்றும் 'வா' போன்ற எளிய தந்திரங்களைக் கற்றுக்கொடுக்கலாம்.

மேலும் படிக்க | குட்டி குரங்குக்கு தாயான பூனையின் கியூட் வீடியோ வைரல்

அந்த வகையில் ஒரு வீடியோ ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு செல்லப் பூனை அதனை வளர்ப்பவரிடம் ஒரு தந்திரத்தை விரைவாகப் புரிந்துகொள்வதைக் காட்டுகிறது. எதிர்பார்த்தபடி, இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி, பார்வையாளர்களை கண்களை விரித்து, வாய் திறக்க வைத்தது. வீடியோ மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் உள்ளது. ட்விட்டர் தளத்தில் வீடியோவைப் பகிரும் போது, "விரைவாகக் கற்றுக்கொள்பவர்," என்று ட்விட்டர் பயனர் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பூனையின் உரிமையாளர் அதற்கு நாணயத்தை வைத்து ஒரு தந்திரத்தைக் கற்றுக்கொடுக்கிறார். அந்த பூனை அவர் சொல்லிக்காட்டுவதை மிகவும் பொறுமையாக பார்க்கிறது. அவரை கவனிக்கும் பூனை பார்த்தால் நம் இதயமே அதனை கண்டு ஆனந்தமாகிவிடும். பூனை அந்த தந்திரத்தை குறையில்லாமல் செய்தவுடன் ஒரு வேடிக்கையான ஆச்சரியத்துடன் அந்த வீடியோ முடிந்துவிடும்.

வைரல் வீடியோ:

இப்போது வைரலான வீடியோ ஜூலை 19 அன்று ட்வீட் செய்யப்பட்டது. இது இதுவரை 6.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், லட்சக்கணக்கான லைக்குகளையும் ரீட்வீட்களையும் குவித்துள்ளது.

இந்த வீடியோ குறித்து ஒரு ட்விட்டர் பயனர் "பூனைகள் மிகவும் அருமையானது" என்று குறிப்பிட்டா். "இவர் மிகவும் வேகமாக கற்றுக்கொள்பவர்" என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மூன்றாவது நபர்,"இது விரைவாகக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல, இது மிகவும் எளிதாக கற்கிறது" என்றார். 

மேலும் படிக்க | ‘நீ ஒத்து பாப்பா': கெத்து காட்டும் புத்திசாலி பூனை.. வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News