பிறந்தநாளுக்கு இப்படியா பண்ணுவீங்க? சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..! பகீர் வீடியோ இதோ!

பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் வன்முறைகளே அதிகம் நடக்கின்றன  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 20, 2022, 11:59 AM IST
  • சிறுவனின் தலையில் முட்டை உடைத்த கொடுமை
  • மூச்சுத்திணறி நிற்கும் சிறுவன்
  • அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ
பிறந்தநாளுக்கு இப்படியா பண்ணுவீங்க? சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..! பகீர் வீடியோ இதோ! title=

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் தற்போது சாதாரணமாகிவிட்டன. அனைத்து வயதினரும் தங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் வித்தியாசமாக பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என எதாவது விஷம பரீட்சை செய்து சிக்கலில் சிக்குவதும் உண்டு. பிறந்தநாள் கொண்டாடும் நண்பனை கூட்டமாக கூடி அடித்து அதில் உயிரிழந்தவர்களின் செய்திகளையும் படித்திருப்போம். அதேபோல பிறந்தநாளுக்கு கேக்கில் பட்டாசு போல எரியும் மெழுகுவர்த்தியை வைத்து கொண்டாடும் போது உடலில் தீப்பிடித்தவர்களின் வீடியோக்களையும் பார்த்திருப்போம். இதுபோன்ற கதைகள் ஒன்றிரண்டு அல்ல. இந்நிலையில் தான் சிறுவன் ஒருவனின் பிறந்தநாளுக்கு அவரது குடும்பத்தனர் செய்த காரியம் தற்போது பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | காஞ்சிபுரம் அருகே 1200ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு

6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில், கேக் வெட்ட தயாராக இருக்கிறான். கேக் வைக்கப்பட்டுள்ள டேபிளின் முன் அவர் நின்றதும், சப்ரைசாக அங்கிருந்த உறவினர்கள் சிறுவனின் தலையில் முட்டையை அடிக்கிறார்கள். அதோடு அவன் மீது ஏதோ மஞ்சள் நிறத்தில் தண்ணீர் ஊற்றுகிறார்கள். அதன்பின்பு கேக்கை எடுத்து முகத்தில் பூசுகிறார்கள். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத சிறுவம் நிலைகுலைந்து குனிந்து நின்று விடுகிறான். ஆனாலும் அந்த அரக்க கும்பல் அவன் மீதான கொண்டாட்டம் என்ற பெயரில் நிகழ்த்தும் வன்முறையை நிறுத்தவில்லை, இப்படியான வீடியோ தான் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இந்த வீடியோவில் கீழ், சிறுவனின் உறவினர்களை திட்டி வருகின்றனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. 

 

மேலும் படிக்க | திருமணத்தை விட்டு விலகி ஓடும் தென் கொரிய இளைஞர்கள்... காரணம் என்ன!

என்ன இருந்தாலும், சிறுவனை இப்படி செய்வது மிகப்பெரிய தவறு என்றும், சிறுவனுக்கு காதுகளில் அந்த தன்ணீர் புகுந்துவிட்டால் என்ன ஆகும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது நண்பர்கள், உறவினர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்வது தான். ஆனால் இதுபோன்ற மோசமான செயல்களை தான் அதிகம் பேர் கொண்டாட்டம் என்ற பெயரில் செய்து வருவது கொடுமையின் உச்சம். பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் வன்முறைகளே அதிகம் நடக்கின்றன. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News