தவறி விழும் குழந்தையை காப்பாற்றும் பூனை -வைரல் வீடியோ

தவறி விழும் குழந்தையை பூனை ஒன்று ஓடிச் சென்று காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 7, 2022, 02:04 PM IST
  • குழந்தையை காப்பாற்றும் பூனை
  • இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடிடியோ
  • 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது
தவறி விழும் குழந்தையை காப்பாற்றும் பூனை -வைரல் வீடியோ title=

வீட்டில் வளர்க்கும் பூனை மற்றும் நாய்களுக்கு வளர்ப்பவர்கள் மீது இருக்கும் கரிசனம் சொல்ல வேண்டியதில்லை. அந்தளவுக்கு வஸூவாசமாக இருக்கும். ஆபத்தான சில நேரங்களில் அவற்றின் உயிரைக் கூட பொருட்படுத்தாது நம்மை காப்பாற்றுவதற்கு அசாத்திய முயற்சி எடுக்கும். அந்த நேரத்தில் வீட்டு விலங்குகளின் சாமார்த்தியத்தை எண்ணி, நாமே வியந்து கொள்வோம்.

மேலும் படிக்க | சாமார்த்தியத்தால் ஆனந்த் மகேந்திராவை வியக்க வைத்த குட்டிபையன்

இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவும் அந்த ரகமே. வீட்டில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பூனை, ஆபத்பாந்தவனாக மாறி குழந்தையை காப்பாற்றுகிறது. அதாவது, அந்த வீடியோவில் குழந்தையும் பூனையும் இருக்கின்றனர். பூனை ஒருபுறம் விளையாடிக் கொண்டிருக்க, குழந்தையும் விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் வீட்டில் பெரியவர்கள் இருப்பது போல் தெரியவில்லை.

ஷோபா மீது அமர்ந்து கொண்டிருக்கும் குழந்தை பின்னர் அதில் இருந்து இறங்கி கீழே விளையாடுகிறது. அப்படியே தத்தி தத்திச் சென்று ஓர் இடத்திற்கு சென்று கீழே இறங்க முயற்சி செய்கிறது. அந்த நொடியில் ஷோபா மீது இருந்த பூனை ஓடி வந்து அங்கு கீழே விழ இருந்த குழந்தையை தூக்கிப் பிடித்து தடுக்கிறது. பூனையின் இந்த செயல் காண்போரை வியக்க வைக்கிறது. டிவிட்டரில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: வசூல் ராஜா MBBS பட பாணியில் 10 வகுப்பு மாணவனின் ஹை டெக் காப்பி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News