Great Escape from Bullet புல்லட்டை தான் வாங்கிக் கொண்டு உயிரைக் காப்பாற்றிய ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போனிலேயே சிக்கி உக்ரைன் ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றி வைரலான புல்லட்... வைரலான வீடியோ 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 24, 2022, 09:06 PM IST
  • உக்ரைன் ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட்போன்
  • வைரலான புல்லட்...
  • வைரலான வீடியோ
Great Escape from Bullet புல்லட்டை தான் வாங்கிக் கொண்டு உயிரைக் காப்பாற்றிய ஸ்மார்ட்போன் title=

Viral Video: ஸ்மார்ட்போன் காரணமாக ராணுவ வீரர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டது. ராணுவ வீரரை நோக்கி வந்த தோட்டா ஒன்று அவரது சட்டைப் பையில் வைத்திருந்த தொலைபேசியை துளைத்தது. அந்த ஸ்மார்ட்போன் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அந்த வீரர் உயிர் பிழைத்திருக்க முடியாது.

சினிமாவில் இதுபோன்ற காட்சியை பார்த்தது நினைவுக்கு வருகிறதா? தற்போது, வாழ்க்கையில் நடப்பதை சினிமாவில் எடுப்பதைவிட, திரையில் பார்ப்பதை கேள்விப்படும் காலமாக இருக்கிறது.

அண்மைகாலங்களாக ஸ்மார்ட்போன் வெடிப்பு பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், ஸ்மார்ட்போன் வெடிப்புகள் அல்லது அதில் தீ பற்றிய பல செய்திகள் வந்துள்ளன, ஆனால் தொலைபேசியால் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டதாகக் கேட்பது இதுவே முதல்முறையாக இருக்கலாம்.

மேலும் படிக்க |  Funny Video: நானும் குயவன் தான்; அசத்தும் கியூட் பூனை

ஸ்மார்ட்போனில் புல்லட் சிக்கியிருப்பதையும், அதை சக வீரர்களிடம் காட்டி ராணுவ வீரர் தனது மொழியில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போன் ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றியது
அறிக்கையின்படி, இந்த வீடியோ ஒரு உக்ரைன் இராணுவ வீரர், அவர் தனது சக சிப்பாயிடம் தொலைபேசியைக் காட்டி, தொலைபேசியால் தனது உயிர் காப்பாற்றப்பட்டதாகக் கூறுகிறார். இந்த வைரலான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்மார்ட்போனில் ஓட்டை போடப்பட்டு அதில் தோட்டா சிக்கியிருப்பதை இந்த வீடியோவில் தெளிவாக காணலாம்.

அறிக்கையின்படி, தொலைபேசியில் 7.62 மிமீ புல்லட் சிக்கியுள்ளது. துப்பாக்கிச் சூடு ஏற்படுத்தும் ஓசையும், வெடி சத்தங்களும் வீடியோவில் கேட்கின்றன. இந்த வீடியோ போர்க்களத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த போன் எந்த பிராண்டிற்கு சொந்தமானது என்பதை வீடியோ மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை.

இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பும் நடந்துள்ளது
தொலைபேசியின் காரணமாக ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பும் பலமுறை இதுபோன்று நடந்துள்ளது, போன் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் நபர் ஒருவர், நோக்கியா 301 காரணமாக தனது உயிர் காப்பாற்றப்பட்டதாகக் கூறினார். அதே நேரத்தில், 2012 ஆம் ஆண்டில், நோக்கியா தொலைபேசியால் தனது உயிர் காப்பாற்றப்பட்டதாக சிரியாவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவை மிக ரசிக்கும் நெட்டிசன்கள், தொடர்ந்து பகிர்ந்து கொண்டதால், இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவின் கமெண்ட் பகுதி முழுவதுமே மகிழ்ச்சியை காட்டும் எமோஜிகளால் நிரம்பியுள்ளது.

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News