‘ஏம்மா..கல்யாணத்துல கூட டோரேமான் பாட்டா?’: கியூட் மணப்பெண்ணின் வைரல் வீடியோ

Funny Wedding Video: அட..இப்படி கூட நடக்குமா? என வியக்க வைக்கும் வகையில், ஒரு மணமளின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அப்படி அவர் என்னதான் செய்தார்? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 22, 2022, 12:56 PM IST
  • திருமண வேடிக்கைகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வந்தவுடன் வைரலாகின்றன.
  • பொதுவாக மணப்பெண் அல்லது மணமகனின் தனித்துவமான ஸ்டைல் ​​மக்களின் இதயங்களை வென்று விடுகிறது.
  • இவர்கள் செய்யும் சில மாறுபட்ட செயல்களும் இவர்களது கியூட் பாணியும் இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தி ரசிக்க வைக்கின்றது.
‘ஏம்மா..கல்யாணத்துல கூட டோரேமான் பாட்டா?’: கியூட் மணப்பெண்ணின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன. திருமணத்தில் பல தினுசில் காட்சிகள் காணப்படுகின்றன. 

திருமண வேடிக்கைகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வந்தவுடன் வைரலாகின்றன. பொதுவாக மணப்பெண் அல்லது மணமகனின் தனித்துவமான ஸ்டைல் ​​மக்களின் இதயங்களை வென்று விடுகிறது. இவர்கள் செய்யும் சில மாறுபட்ட செயல்களும் இவர்களது கியூட் பாணியும் இணையவாசிகளை  வியப்பில் ஆழ்த்தி ரசிக்க வைக்கின்றது. அந்த வகையில், சமீபத்தில் அத்தகைய ஒரு மணமகளின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

தனது திருமணத்தில் மணமகள் செய்யும் இந்த வித்தியாசமான விஷயத்தை பார்த்து திருமணத்தில் இருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இணையவாசிகளும் இதை வியப்போடு ரசித்து பார்த்து வருகின்றனர். பொதுவாக மணமகள் தனது திருமணத்தில் மணமகனுக்காக சினிமா பாடல்களை பாடுவதையும், நடனமாடுவதையும் பார்த்துள்ளோம். ஆனால், இந்த மணமகள் ஒரு மிகவும் வித்தியாசமான வேலையை செய்கிறார். மணமகள் பிரபலமான ஒரு கார்டூன் தொடரின் டைட்டில் சாங்கை பாடுகிறார். இதைப் பார்த்து மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். 

மேலும் படிக்க | மேடையில் மணமகன் செய்த வேலையால் வெட்கத்தின் உச்சியில் மணமகள்: வீடியோ வைரல் 

ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்கென பிடித்த ஒரு ஃபேவரட் கார்டூன் இருக்கும். டோரேமான் பலருக்கு பிடித்த கார்டூனாக உள்ளது. அதன் டைட்டில் சாங்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாடலாக, குழந்தைகளுக்கு இடையில் மிகவும் பிரபலமான பாடலாக உள்ளது. பெரும்பாலான சிறு குழந்தைகள் இந்தப் பாடலை அடிக்கடி பாடுவதும் உண்டு. ஆனால், திருமணத்தில் மணமகள் இந்த பாடலை பாடுவது மிகவும் வியப்பை அளிக்கின்றது. இவர் தனது மணமகனுக்காக, அவரை மகிழ்விக்க இந்த பாடலைதான் தேர்ந்தெடுக்கிறார். 

மணமகள் டோரேமான் பாட்டு பாடுவது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தாலும், மணமகனுக்கு அது மகிழ்ச்சியையே அளித்தது. வீடியோவின் முடிவில் மணமகனும் அந்த பாடலைப் பாடுவதைக் கேட்க முடிகிறது. இதைப் பார்த்த அனைவரும் இன்னும் அதிகமாக ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@the_wedding_dance_india)

‘மற்றவர்களை பார்த்து காப்பி அடிக்காமல், தங்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும். அதில்தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில், the_wedding_dance_india என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளனர். மணமகளின் குழந்தைத்தனத்தையும், கியூட்டான பாணியையும் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். 

மேலும் படிக்க | கல்யாணத்த வெச்சிகிட்டு இப்படியா செய்யறது? புல்லெட்டில் பறந்த மணமகள், வைரல் விடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News