புல்லெட்டில் மணமக்களின் மாஸ் எண்ட்ரி: இணையத்தை பற்றவைத்த வைரல் வீடியோ

Viral Video: இன்றைய காலகட்டத்தில் மணமக்கள் தங்கள் திருமணங்களில் மறக்க முடியாத, வித்தியாசமான பல விஷயங்களை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 4, 2024, 05:15 PM IST
  • இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் Candid Photographer என்ற பயனர் பதிவேற்றியுள்ளார்.
  • இந்த வீடியோவுக்கு 1.56 கோடிக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்ஸ்களும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
புல்லெட்டில் மணமக்களின் மாஸ் எண்ட்ரி: இணையத்தை பற்றவைத்த வைரல் வீடியோ title=

Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

திருமணங்களின் பல வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் (Wedding Viral Video) மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. இவை உடனே பலரால் பகிரப்பட்டு வைரலும் ஆகின்றன. திருமண வீடியோக்களில் நாம் பல வித காட்சிகளை காண்கிறோம். திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் மணமக்கள் தங்கள் திருமணங்களில் மறக்க முடியாத, வித்தியாசமான பல விஷயங்களை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இதில் மணமண்டபத்திற்குள் நுழையும் விதமும் அடங்கும். மணமேடையில் வித்தியாசமான எண்ட்ரி கொடுக்க வேண்டும் என மணமக்கள் விரும்புகிறார்கள். அப்படி, வித்தியாசமான முறையில் மாஸாக எண்ட்ரி கொடுத்த ஒரு ஜோடியின் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

சமீபத்தில் ஒரு திருமண ஜோடி புல்லட் பைக்கில் திருமண மண்டபத்திற்குள் தனித்தனியாக நுழைந்த வீடியோ வைரலானது. ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் சவாரி செய்து வந்த அந்த ஜோடியை இப்போது நெட்டிசன்கள் ராயல் ஜோடி என்று அழைத்து வருகிறார்கள். குறிப்பாக, மணமகள் மிக லாவகமாக பைக்கை ஓட்டி வந்த விதம் அனைவரது உள்ளத்தையும் கவர்ந்துள்ளது. 

மேலும் படிக்க | கலைக்கு வயதாவதில்லை! நிரூபிக்கும் பாட்டியின் வைரல் ஓவியம் வீடியோ...

மணமக்களின் துடிப்புமிக்க எண்ட்ரி வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மணமகனும் மணமகளும் இரண்டு புல்லட் பைக்குகளில் திருமண மண்டபத்திற்குள் நுழைவதை காண முடிகின்றது. அந்த வேளையில் அங்கு கூடி இருந்த அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள். மணமக்கள் இருவரும் இரண்டு பைக்குகளில் தனித்தனியாக வந்தாலும், ஒன்றாக மணமண்டபத்திற்குள் நுழைகிறார்கள். வீடியோவை பார்த்தால், இதற்கு அவர்கள் நன்றாக பயிற்சி பெற்றிருப்பார்கள் என்பது தெரிகிறது. 

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் Candid Photographer என்ற பயனர் பதிவேற்றியுள்ளார். வீடியோவின் தலைப்பில், “என் வாழ்க்கையில் முதல்முறையாக, மணமகள் புல்லட் ஓட்டி மணமேடையில் நுழைவதை பார்க்கிறேன்.” என்று அவர் எழுதியுள்ளார்.  இந்த வீடியோவுக்கு 1.56 கோடிக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்ஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

“மணமக்களின் மகிழ்ச்சியும் துடிதுடிப்பும் அவர்களது எண்ட்ரியிலேயே தெரிகின்றது.” என ஒரு பயனர் எழுதியுள்ளார். “மணமக்கள் இந்த வாழ்க்கை பயணத்தில் மிக ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது இந்த புல்லட் ரைட் மூலமே புரிகின்றது” என மற்றொரு பயனர் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | வலைக்குள் சிக்கிய நரி! சிக்கித் தவிக்கும் பரிதாப நரியின் ஊளை வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News