செயற்கையாக செய்யும் நிகழ்வுகளை விட, இயற்கையாக நடக்கும் நிகழ்வுகள்விரைவில் பலரின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன. இயற்கை பல வியக்கத்தக்க அற்புதங்களை படைத்துள்ளது, அந்த அற்புதமானவைககை நாம் உணரும் வகையில் ஒவ்வொரு நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. அதுபோன்ற ஒரு அழகான நிகழ்வு தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. பறவை (Bird) ஒன்று கூடு கட்ட நுணுக்கமாக இலையிலிருந்து தண்டுகளை பிரித்தெடுக்கும் வீடியோ தான் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
ALSO READ | ’இது எங்க ஏரியா..!’ சிங்கத்தின் ஒற்றை பார்வையில் ஓடிய ஓநாய்கள் - Viral Video
கடந்த வெள்ளிக்கிழமையன்று IPS அதிகாரி திபன்ஷூ கப்ரா என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் Columbidae என்ற ஒரு குடும்பத்தை சார்ந்த நீலம் மற்றும் பச்சை நிறம் கலந்த அழகிய பறவையொன்று கூடு கட்ட முயற்சி செய்வதை காண முடிகிறது. பசுமையான மரக்கிளையில் அந்த பறவை அமர்ந்துகொண்டு இலைகளின் நடுவே உள்ள தண்டை நுணுக்கமாக தனது அலகினால் தனியே பிரித்தெடுக்கிறது. அவ்வாறு தனியே பிரித்தெடுத்த அந்த தண்டுகளை, பறவை தன்னுடைய வாலின் பின்னல் சொருகிக்கொள்கிறது. பறவையின் இந்த திறமையை கண்ட இணையவாசிகள் வியப்பில் ஆழ்ந்து போயிருக்கின்றனர்.
घोंसला बनाने के लिए पत्तियों के हिस्से को चतुराई से बटोरकर ले जाती नन्ही #Columbidae चिड़िया को कुदरत के सबसे कुशल आर्कीटेक्ट में गिना जा सकता है... pic.twitter.com/ProW3sops1
— Dipanshu Kabra (@ipskabra) February 4, 2022
Columbidae குடும்பத்தை சார்ந்த பறவைகள் குட்டையான கழுத்து மற்றும் மெல்லிய அலகு கொண்ட சிறிய, குண்டான பறவைகள். இவ்வகை பறவைகள் விதைகள், பழங்கள் மற்றும் தாவரங்களை உண்ணுகின்றன. இந்த வீடியோவை பதிவிட்ட அதிகாரி திபன்ஷூ கப்ரா, அந்த வீடியோ க்ளிப்புடன், "இந்தப் பறவை இயற்கையின் மிகவும் திறமையான கட்டிடக் கலைஞர்களில் ஒன்றாகும் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ அறுபத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை தாண்டியுள்ளது. இதனை பார்த்த பயனர்கள் "இவர்கள் இயற்கையின் சிறந்த கட்டிடக் கலைஞர்கள்" என்றும், இவை மிகவும் புத்திசாலி, க்யூட் என்றும் பல நல்லவிதமான கமெண்டுகளை செய்து வருகின்றனர்.
She’s so intelligent and meticulous!! And cute too..! Wow!
— Samriti (@SamritiSaran) February 4, 2022
ALSO READ | Viral Video: மேஜிக் ட்ரிக் பார்த்து அசந்துபோன குரங்கின் வேற லெவல் ரியாக்ஷன்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR