சமையல்காரர் சாக்லேட்டிலிருந்து உருவாக்குவது என்ன தெரியுமா? பாம்பை உருவாக்கும் சமையல்காரரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
சுவையான உணவை தயாரிப்பதில் பெயர் வாங்கிய உணவுக் கலை நிபுணர், சாக்லேட் பாம்பை உருவாக்குகிறார். வழக்கமாக பாம்பு நம்மை கடித்தால் எப்படி இருக்கும் என்று கடி வாங்கியவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால், இந்த பாம்பைக் கடித்தால் சுவையாக இனிக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரியும்.
அதை சுவையானது, அற்புதமானது என்று அழைக்கிறார்கள் இணைய உலகத்தில் உலா வரும் நெட்டிசன்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
பாம்பின் சாக்லேட் மாஸ்டர்பீஸை சமையல்காரர் தயாரிப்பதை வீடியோ காட்டுகிறது.
சாக்லேட் கிங் கோப்ரா
கிங் கோப்ரா வீடியோ: பிரபல சுவிஸ்-பிரெஞ்சு சமையல்காரரான அமுரி குய்ச்சோன், சமீபத்தில் தனது 7.3 மில்லியன் பின்தொடர்பவர்களுக்காக ஒரு அழகான சாக்லேட் கிங் கோப்ராவை உருவாக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
சமையல்காரர் அவரது பேஸ்ட்ரி வடிவமைப்புகள் மற்றும் சாக்லேட் தலைசிறந்த படைப்புகளுக்கு பிரபலமானவர். அவர் அடிக்கடி ரீல்ஸ் மற்றும் படங்களை அவர் அற்புதமான இனிப்புகளை எப்படி செய்கிறார் என்பதைக் காட்டுகிறது.
மேலும் படிக்க | அழகான 9 மனைவிகள்: டைம் டேபிள் போட்டு காதலிக்கும் காதல் கணவன்
சாக்லேட் கிங் கோப்ராவின் சமீபத்திய ரீல் 5.7 மில்லியன் பார்வைகளையும் 571k விருப்பங்களையும் பெற்றுள்ளது. புதிதாக ஒரு மண் பானையின் மேல் அமர்ந்திருக்கும் பாம்பின் சாக்லேட் மாஸ்டர்பீஸை அவர் தயாரிப்பதை வீடியோ காட்டுகிறது.
இந்த பாம்பை செதுக்கவே தனக்கு 8 மணி நேரம் பிடித்தது என்று பதிவின் தலைப்பில் சமையல்காரர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் அவர் உருகிய சாக்லேட்டை பானையாக செதுக்குகிறார். பிறகு சில சாக்லேட்டை சுருட்டி, அறுத்து அதை ஒரு நாகப்பாம்பாக வடிவமைக்கிறார்.
சமையல்காரர் நாகப்பாம்பின் மீது செதில்கள், கண்கள் மற்றும் வாய் ஆகியவற்றை செதுக்கி, இறுதியில் பாம்பாக முடிக்கிறார். சாக்லேட் மாஸ்டர்பீஸ் சுவையாகவும், யதார்த்தமாகவும், முற்றிலும் அற்புதமாகவும் தெரிகிறது.
இந்த பாம்பு வீடியோவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடிக்கும் பாம்பை நாம் கடித்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறதா?
மேலும் படிக்க | படுக்கையில் மனைவி செய்த வேலை, கடுப்பான கணவன்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR