கண்ணாடியில் தன்னை பார்த்த கரடியின் அலப்பறை.. அடக்க முடியாம சிரிப்பீங்க: வைரல் வீடியோ

Funny Animal Video: கரடியின் இந்த அட்ராசிடி வீடியோவை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

Last Updated : Sep 3, 2023, 06:17 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான X இல் (முன்னர் ட்விட்டர் என அறியப்பட்டது) @fasc1nate என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு 14.8 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும், ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
கண்ணாடியில் தன்னை பார்த்த கரடியின் அலப்பறை.. அடக்க முடியாம சிரிப்பீங்க: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

விலங்குகளில் பாம்பு, குரங்கு, புலி, சிங்கம், கரடி ஆகிய விலங்குகளின் வீடியோகளுக்கு இணையவாசிகள் இடையே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

கரடியின் மிக வித்தியாசமான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில், நாம் சற்றும் எதிர்பாராத ஒரு விஷயம் நடக்கின்றது. இதை பார்க்க மிகவும் விசித்திரமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. கரடியின் இந்த அட்ராசிடி வீடியோவை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

காட்டில் கன்பியூஸ் ஆன கரடி

வீடியோவின் துவக்கத்தில் ஒரு கரடி அடர்ந்த காட்டில் சுற்றித் திரிவதைக் காண முடிகின்றது. அந்த காட்டில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கப்பட்டு இருக்கின்றது. அங்கு வரும் கரடிக்கு திடீரென கண்ணாடியில் தனது முகம் தென்படுகிறது. தன்னை கண்ணாடியில் பார்த்த கரடி பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறது. அது அச்சப்பட்டதா, கோவப்பட்டதா, விளையாடியதா என சரியாக புரியவில்லை என்றாலும், அதற்கு தான் கண்னாடியில் பார்த்த விஷயம் பிடிக்கவில்லை என்றே வீடியோவை பார்த்தால் புரிந்துகொள்ள முடிகின்றது. 

வைரலாகும் இந்த வீடியோவில், கரடியின் ஒரு அரிதான ஒரு செயலை காண முடிகின்றது. இதை பார்த்தால் நாம் வயிறு குலுங்க சிரிப்பதை நிறுத்த முடியாது.கண்ணாடியில் தன்னை பார்த்து கரடி கொடுக்கும் ரியாக்ஷன் நம்மை வெகுவாக சிரிக்க வைக்கிறது. கண்ணாடியில் தன்னை பார்த்த கரடி அதை வேறொரு விலங்கு என தவறாக நினைத்து, திகைத்து, அதன் மீது விழுந்து, கண்ணாடியைத் தாக்கி, பல விஷயங்களை செய்கிறது.

மேலும் படிக்க | ’தானாகவே நடக்கும் ஏணி' இணையத்தில் பரவும் விநோதமான வைரல் வீடியோ

கரடியின் அட்ராசிடி வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான X இல் (முன்னர் ட்விட்டர் என அறியப்பட்டது) என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு  14.8 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும், ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

ஒரு பயனர், "நான் கண்ணாடியில் பார்க்கும்போது சில காலை நேரங்களில் இப்படித்தான் உணர்கிறேன்." என எழுதியுள்ளார். 'இந்த வீடியோ மிக வேடிக்கையாக உள்ளது. இதை பார்த்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை' என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | மான்களின் பசி போக்க குரங்கு செஞ்ச வேலை: இணையவாசிகளை நெகிழ வைத்த வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News